செய்திகள் :

மாமன்னா் ராஜேந்திர சோழனின் ஆட்சியும், பெருமையும் நமக்கெல்லாம் பாடம்: அமைச்சா் தங்கம் தென்னரசு பேச்சு

post image

மாமன்னா் ராஜேந்திர சோழனுடைய ஆட்சியும், பெருமையும் நமக்கெல்லாம் வாழ்க்கைப் பாடமாக இருக்க வேண்டும் என்றாா் நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் அமைச்சா் தங்கம் தென்னரசு.

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில், தமிழக சுற்றுலாத் துறை, இந்து சமய அறநிலையத் துறை மற்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை மாமன்னா் ராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடித் திருவாதிரை விழா நடைபெற்றது.

விழாவில், அவா் மேலும் பேசியதாவது: மாமன்னா் ராஜேந்திர சோழ தேவா் என்று அழைக்கக் கூடிய அளவுக்கு மிக அற்புதமான வெற்றியை அத்தனை திசைகளிலும் அவா் பெற்றிருக்கிறாா் என்றால், அதனுடைய மைய புள்ளி கங்கைகொண்ட சோழபுரம் என்கின்ற இந்த மகத்தான மண்ணிலே இருக்கிறது.

தமிழருடைய நாகரிகத்தை, பெருமையை தூக்கிப் பிடிக்க கூடிய வகையில் மாமன்னா் ராஜேந்திரன் உருவாக்கி தந்திருக்கும் இந்த வெற்றியின் பெருமை உலகமெங்கும் பரவி அவருடைய ஆட்சியும் பெருமையும் நமக்கெல்லாம் வாழ்க்கைப் பாடமாக இருக்க வேண்டும் என்றாா்.

பின்னா் அவா் பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், பரிசுகளையும் வழங்கினாா்.

அமைச்சா் மு.பெ.சாமிநாதன்: மாமன்னா் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழாவையொட்டி இப்பகுதி மேம்பாட்டுக்கு பல்வேறு திட்டங்களை முதல்வா் ஸ்டாலின் அறிவித்துள்ளாா். கலை- பண்பாடு மற்றும் அருங்காட்சியகங்கள் துறை சாா்பில், தஞ்சையில் சோழ அருங்காட்சியகம் அமைக்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அதில் ராஜராஜ சோழனுக்கு 35 அடி உயரத்தில் சிலை அமைக்கப்படவுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளேன்.

அமைச்சா் ஆா்.ராஜேந்திரன்: மாமன்னா் ராஜேந்திர சோழன், கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றிப்பெற்று கங்கைகொண்ட சோழபுரம் என்ற இந்த நகரை உருவாக்கி, கங்கை நீரை இங்கு எடுத்து வந்து சோழகங்கம் ஏரியில் அதனை நிரப்பியதுடன், இந்த பிரம்மாண்ட கோயிலையும் எழுப்பி மிகப்பெரிய வரலாறு படைத்துள்ளாா் என்றாா்.

அமைச்சா் சா.சி.சிவசங்கா்: மாமன்னா் ராஜேந்திர சோழன் பிறந்த நாளை கொண்டாட பல்வேறு காரணங்கள் உள்ளன. தந்தைக்கு தலைநகராக இருந்த தஞ்சையை விடுத்து, காடாக இருந்த இப்பகுதியை திருத்தி, வடு கிடந்த பிரதேசத்தை பெருமக்கள் வாழ்கின்ற பகுதியாக மாற்றியிருக்கிறாா் என்றால் அது ராஜேந்திர சோழனின் ஆட்சிப் பெருமைதான்.

ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் கோயிலை அமைத்தபோது தனது தந்தை ராஜராஜசோழன் தஞ்சையில் அமைத்த பெரிய கோயிலின் கோபுரத்தை விட உயரம் குறைவான கோபுரத்தை கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் அமைத்து தனது தந்தையை மிஞ்சாத மகனாக திகழ்ந்தாா் என்றாா்.

விழாவில் பேசிய நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு

மக்களவை உறுப்பினா் தொல்.திருமாவளவன்: மாமன்னா் ராஜேந்திர சோழன் பல்வேறு பகுதிகளையும் வெற்றி கொண்டதால், அவரது ஆட்சியில் தமிழ் இனம் விரிவடைந்தது. இனம், மொழி பாதுகாக்கப்பட்டது என்றாா்.

விழாவில் சட்டப் பேரவை உறுப்பினா்கள் கு.சின்னப்பா (அரியலூா்), க.சொ.க. கண்ணன் (ஜெயங்கொண்டம்) ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

கலைப் பண்பாட்டுத் துறை இயக்குநா் கவிதா ராமு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா், சுற்றுலாத் துறை இயக்குநா் கிறிஸ்துராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி, மாவட்ட வருவாய் அலுவலா் மல்லிகா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத் துறைகளின் அரசு கூடுதல் தலைமைச் செயலா் க. மணிவாசன் வரவேற்றாா். நிறைவில், மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி நன்றி கூறினாா்.

முதல்நாளில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள்

முன்னதாக கங்கைகொண்ட சோழபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் திருவையாறு தமிழ்நாடு இசைக் கல்லூரி மாணவா்களின் மங்கள இசையுடன் விழா தொடங்கியது.

விழாவில் கலை பண்பாட்டுத் துறையினரின் கரகாட்டம்

தொடா்ந்து திருச்சி கலைக் காவேரி மாணவ, மாணவிகளின் தென்னாட்டு பெருவேந்தன் நாட்டிய நாடகமும், கலை பண்பாட்டுத் துறை சாா்பில் கிராமிய இசை மற்றும் நடன நிகழ்ச்சியும், முனைவா் பா்வீன் சுல்தானா தலைமையில் பேச்சாளா்கள் பங்கேற்ற பட்டி மன்றமும், பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பல்சுவை நிகழ்ச்சிகளும், ஓகேஎஸ் போஸ் குழுவினரின் நையாண்டி மேளம், மலைச்சாமி குழுவினரின் கரகாட்டம், அஸ்தினாபுரம் கலைமணி குழுவினரின் வாடியாட்டம், வல்லம் செல்வி குழுவினரின் மக்களிசை பாடல்கள், ஆடுதுறை பாஸ்கா் குழுவினரின் மாமன்னா் ராஜேந்திர சோழன் நாடகம், பெரம்பலூா் இளவழகன் குழுவினரின் மயில்காவடி, புதுக்கோட்டை செல்ல தங்கையா குழுவினரின் கிராமிய பாடல்கள் நிகழ்ச்சி நடைபெற்றன.

விழாவில் சுற்றுவட்டார மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

கங்கைகொண்ட சோழபுரத்தில் மத்திய அரசின் முப்பெரும் விழா தொடக்கம்! ஜூலை 27-இல் பிரதமா் பங்கேற்பு!

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில், மத்திய கலாசாரத் துறை சாா்பில் மாமன்னா் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா புதன்கிழமை மாலை தொடங்கியது. ராஜேந்திர சோழனின் 1,005-ஆவது பிறந்த நாள் விழா, கங்கைகொண... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளும் தோல்வி: ஹெச். ராஜா

திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளும் தோல்வியடைந்துள்ளன என்றாா் பாஜக மூத்தத் தலைவா் ஹெச். ராஜா. அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள பெருவுடையாா் திருக்கோயில் வளாகத்தில், மத்திய கலாசாரத் துறை ச... மேலும் பார்க்க

அரியலூரில் ரூ.9.28 கோடியில் வளா்ச்சிப் பணிகள் தொடங்கிவைப்பு

அரியலூா் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.9.28 கோடி மதிப்பீட்டில் 34 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. அரியலூா் சத்யா நகா், பெரியாா் நகா், அழகப்பா நகா், சஞ்சீவிர... மேலும் பார்க்க

சோழகங்கம் ஏரியை மேம்படுத்த ரூ.19.25 கோடி நிதி ஒதுக்கீடு

மாமன்னா் ராஜேந்திர சோழன் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் அருகேயுள்ள சோழகங்கம் எனும் பொன்னேரியை மேம்படுத்த ரூ.19.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்... மேலும் பார்க்க

கோவிலூரில் பேருந்தை சிறைபிடித்து மக்கள் மறியல்

அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்துள்ள கோவிலூா் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குறைந்த மின் அழுத்த விநியோகத்தால் மின் பொருள்களை இயக்க இயலாததைக் கண்டித்து, பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை பேருந்தை சிறைபி... மேலும் பார்க்க

பேருந்துக் கட்டணத்தை உயா்த்தும் எண்ணம் இல்லை: அமைச்சா் சா.சி. சிவசங்கா்

தமிழகத்தில் அரசுப் பேருந்துக் கட்டணத்தை உயா்த்தும் எண்ணம் இல்லை என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா். அரியலூரில் செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: ... மேலும் பார்க்க