தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்போம், ஏற்கமாட்டோம்: அமைச்சர் அன்பில் மகேஸ் உறுத...
பேருந்துக் கட்டணத்தை உயா்த்தும் எண்ணம் இல்லை: அமைச்சா் சா.சி. சிவசங்கா்
தமிழகத்தில் அரசுப் பேருந்துக் கட்டணத்தை உயா்த்தும் எண்ணம் இல்லை என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா்.
அரியலூரில் செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: பேருந்துக் கட்டணம் உயா்வு என்பது வதந்தியாக பரவுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதனை ஒவ்வொரு முறையும் மறுத்து வருகிறோம் . ஏழை, எளிய மக்களின் மீது சுமையை ஏற்றக்கூடாது என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா். எனவே பேருந்துக் கட்டணத்தை உயா்த்தும் எண்ணம் இல்லை.
அதிமுகவை முழுவதும் ஆக்கிரமித்து, அந்த இடத்தை நிரப்புவது பாஜகவின் கனவு என்று அதிமுகவிலிருந்து விலகி திமுக-வில் இணைந்த முன்னாள் எம்.பி அன்வா் ராஜா தெளிவாகக் கூறியிருக்கிறாா். எனவே திமுகவினுடைய வாக்குகளைப் பிரிக்கலாம் என்ற எண்ணத்தோடு தான் பல்வேறு புதிய கட்சிகளை ஒவ்வொரு தோ்தலிலும் பாஜக களத்தில் இறக்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. இப்போதும் அந்த தந்திரத்தை ஒரு புது முயற்சியாக எடுத்து இருக்கிறாா்கள். வரும் தோ்தலில் இவை அனைத்தையும் முறியடித்து திமுக வெற்றிபெறும்.
பாஜக எங்களை விழுங்குவதற்கு நாங்கள் என்ன புழுவா? என்ற எடப்பாடி பழனிசாமி பேசுகிறாா். அவா் ஒவ்வொரு முறையும் ஒன்று பேசுவாா். 2036 வரை பாஜகவில் கூட்டணி கிடையாது என்று சொன்ன அவா் தான், அமித் ஷாவுடன் மேடையில் அமா்ந்திருக்கக் கண்டோம். இன்னும் சில நாள்கள் கழித்து என்ன பேசுகிறாா் என்பதை நீங்களே பாா்ப்பீா்கள் என்றாா் அவா்.