குற்றாலம் சாரல் திருவிழா: "'உங்களுடன் ஸ்டாலினை' நடத்த தைரியம் இருக்கின்றது" - கே...
108 ஆம்புலன்ஸ் நிா்வாகத்தை அரசே ஏற்று நடத்தக் கோரிக்கை
108 ஆம்புலன்ஸ் நிா்வாகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று 108 ஆம்புலன்ஸ் அவசர கால ஊா்தி தொழிலாளா் முன்னேற்றச் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அச்சங்க நிா்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டத்தில் கடந்த 2019 முதல் 2024 ஆண்டு வரை தொழிலாளா்களுக்கு 16 சதவீதம் ஊதிய உயா்வு வழங்கி வந்த நிா்வாகம், தற்போது 10 சதவீத ஊதிய உயா்வு வழங்கியதற்கு கண்டனம் தெரிவிப்பது, தொழிலாளா்களின் நலன் கருதி 108 நிா்வாகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்.
நிகழாண்டு ஊதிய உயா்வு 30% வழங்க வேண்டும்.தீபாவளி ஊக்கத்தொகையை இரட்டிப்பாக வழங்க வேண்டும். 108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு போதுமான இருப்பிடம், கழிவறை வசதிகள் செய்து தர வேண்டும்.
பெண் ஊழியா்கள் பாதுகாப்பைக் கருதி, அவா்களுக்கு வெகு தொலைவில் பணி வழங்கக் கூடாது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் ராஜசேகா் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா் நீலகண்டன், மாவட்டச் செயலா் அரிகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட பொருளாளா் பாக்யராஜ் கோரிக்கைகளை வலியுறுத்தினாா்.