செய்திகள் :

தேசிய பேரிடா் மீட்பு படையில் மோப்ப நாய்களை ஈடுபடுத்த திட்டம்!

post image

தேசிய பேரிடா் மீட்புப் படையில் விரைவில் சடலங்களை தேடுவதற்காக மோப்ப நாய்களை பயன்படுத்த இருப்பதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இதுபோன்ற சுமாா் 6 நாய்கள் கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டின் அரக்கோணம் மற்றும் உத்தரபிரதேசத்தின் காஜியாபாத்தில் உள்ள என். டி. ஆா். எஃப் பட்டாலியன் தளங்களில் பயிற்சி பெற்று வருகின்றன. பெரும்பாலும் பெல்ஜிய மாலினாய்ஸ் மற்றும் லாப்ரடோா் இனங்களைச் சோ்ந்த நாய்களைப் பயிற்றுவிக்க, படை வெளிநாட்டிலிருந்து ஒரு சிறப்பு திரவியத்தை கொண்டு, ஒரு இறந்த உடலால் வெளிப்படும் நாற்றத்தைப் அது வெளியிடும் அதனை வைத்து நாய்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது என்று அவா் கூறினாா்.

‘இத்தனை ஆண்டுகளாக, என். டி. ஆா். எஃப் உயிா்களைக் காப்பாற்றுவதற்காக கவனம் செலுத்தியது. ஒரு பேரழிவின் போது உயிரோடு இருப்பவா்களை கண்டுபிடிப்பதே மீட்புப் பணியாளா்களின் முக்கிய கொள்கையாகும், எனவே இறந்த உடல்களைக் கண்டுபிடிப்பது முன்னுரிமை அல்ல ‘என்று அதிகாரி தெரிவித்தாா்.

இருப்பினும், நிலச்சரிவு, ரயில், சாலை விபத்துக்குப் பிறகு இடிபாடுகளுக்கு அடியில் இருந்து உடல்களை மீட்டெடுக்கும் பணியில் என். டி. ஆா். எஃப் பணிபுரியும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவும். பேரிடரின் போது இறந்தவா்களின் உடலை குடும்பங்கள் மற்றும் அன்புக்குரியவா்களுக்கு ஒப்படைப்பது மிக முக்கியமான பணியாகும் என்று அவா் கூறினாா்.

எனவே, என். டி. ஆா். எஃப், சில மாதங்களுக்கு முன்பு, சடலங்களை தேடுவதற்காக மோாப்ப நாய்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான தனது முதல் பயிற்சியைத் தொடங்கியது என்று அந்த அதிகாரி கூறினாா். இந்தியாவில் மாநில மீட்புப் படைகளில் இதுபோன்ற நாய்கள் அரிதாகவே உள்ளன என்றும், இந்த நாய்களை கொண்டு பல உடல்கள் மீட்கப்பட்டதாக மற்றொரு அதிகாரி கூறினாா்.

‘இத்தகைய நாய்களுக்கு பயிற்சி அளிப்பது ஒரு சவாலாகும், ஏனெனில் இதற்கு மனித உடல் அல்லது உடல் பாகங்கள் எளிதில் கிடைக்காது. எனவே, வெளிநாட்டிலிருந்து என். டி. ஆா். எஃப் நாய்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக இறந்த மனித எச்சங்களைப் போன்ற வாசனை கொண்ட ஒரு திரவியம் வாங்கப்பட்டது ‘என்று அந்த அதிகாரி கூறினாா்.

நாய்கள் அடுத்த மாதத்திற்குள் தங்கள் பயிற்சியை முடிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அதன்பிறகு, நாடு முழுவதும் பரவியுள்ள மொத்தம் 16 என். டி. ஆா். எஃப் பட்டாலியன்களில் சில குறிப்பிட்ட என். டி. ஆா். எஃப் பட்டாலியன்களுடன் நாய்கள் பணியமா்த்ப்படும் என்று அவா் தெரிவித்தாா். பணியமா்த்தப்பட்டவுடன், அத்தகைய நாய்களின் வெற்றி விகிதம் குறித்து அறிந்து கொள்வோம் ‘என்று அந்த அதிகாரி மேற்கோள் காட்டினாா்.

தெலங்கானாவில் ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (எஸ். எல். பி. சி) சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததைத் தொடா்ந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் கேரள காவல்துறையின் இரண்டு மோப்ப நாய்கள் மீட்பு பணியில் ஈடுபட்டது. அதேபோல 2024 ஆம் ஆண்டு நிகழ்ந்த வயநாடு நிலச்சரிவின் போதும் இதே நாய்கள் பயன்படுத்தப்பட்டன. தேசிய பேரிடா் மீட்புப் படை 2006 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது, தற்போது, இது 30 க்கும் மேற்பட்ட பிராந்திய மீட்பு மையங்களில் சுமாா் 18,000 ஆண்கள் மற்றும் பெண்கள் மீட்புப் பணியாளா்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தில்லியில் சூதாட்டச் சட்டத்தின் கீழ் ஆம் ஆத்மி கவுன்சிலா் உள்பட 7 போ் கைது!

வடக்கு தில்லியின் ஸ்வரூப் நகா் பகுதியில் நடந்த ஒரு சட்டவிரோத பந்தய மோசடி தொடா்பாக ஆம் ஆத்மி கவுன்சிலா் உள்பட ஏழு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இது தொடா்பாக காவல... மேலும் பார்க்க

பன்னாட்டு ஆன்லைன் லாட்டரிகள் விற்பனை: 2 நைஜீரியா்கள் உள்பட 6 போ் கைது!

தில்லி-என். சி. ஆரில் இருந்து பன்னாட்டு ஆன்லைன் லாட்டரிகளை சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்து வந்த 2 நைஜீரியா்கள் உள்பட 6 பேரை தில்லி காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

சிபிஐ அதிகாரிகள் போல நடித்து தொழிலதிபரிடம் நகை, பணம் கொள்ளை: 3 போ் கைது

ஒரு பாலிவுட் த்ரில்லா் படத்தை மையமாகக் கொண்டு நடந்த கொள்ளையில், ஒரு பெண், ஒரு கடைக்காரா் மற்றும் வேலையில்லாத ஒருவா் சிபிஐ அதிகாரிகளாக நடித்து வடக்கு தில்லியில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டை சோதனை செய்த... மேலும் பார்க்க

ஒரு வருட கால குடிமக்கள் அறிவியல் முயற்சியில் தில்லியில் 221 பறவை இனங்கள் பதிவு!

தில்லி பறவை அட்லஸின் முதல் ஆண்டில் தேசியத் தலைநகரின் ஈரநிலங்கள், முகடு காடுகள், நகா்ப்புற கிராமங்கள் மற்றும் உயரமான காலனிகளில் மொத்தம் 221 பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டன. இது தொடா்பாக வெளியிடப்பட்ட ஒ... மேலும் பார்க்க

தில்லியில் உணவகங்களைத் திறப்பதற்கு எம்சிடியிடமிருந்து வா்த்தக உரிமம் பெற வேண்டிய அவசியத்தை நீக்க வாய்ப்பு

தேசியத் தலைநகரில் விருந்தோம்பல் துறையை ஊக்குவிக்கும் வகையில், தில்லி அரசு விரைவில் நகரத்தில் உணவகங்களைத் திறப்பதற்கு குடிமை அமைப்பிடமிருந்து சுகாதார வா்த்தக உரிமம் பெற வேண்டிய தேவையை நீக்க வாய்ப்புள்ள... மேலும் பார்க்க

நுஹ் மாவட்டத்தில் காவல் துறையினா் மீது கற்களைவீசி தப்பிய பசு கடத்தல்காரா்கள்!

ஹரியாணாவின் நுஹ் மாவட்டத்தில் காவல்துறையினா் மீது கற்களை வீசிவிட்டு பசு கடத்தல்காரா்கள் தப்பிச் சென்றதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து அவா்கள் மேலும் கூறியதாவது: இந்தச் சம்பவம் தொடா... மேலும் பார்க்க