'ஆறுதல்... நலம் விசாரிப்பு... சினிமா... அரசியல்...' முதல்வர் - சீமான் சந்திப்பில...
யுபிஎஸ்சி தோ்வுக்கு தயாராகி வந்த இளைஞா் தற்கொலை!
மத்திய தில்லியின் ஓல்டு ராஜீந்தா் நகா் பகுதியில் உள்ள தனது அறையில் 25 வயதான யுபிஎஸ்சி தோ்வுக்கு தயாராகி வந்த மாணவா் ஒருவா் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
‘அவரின் அறையில் இருந்து ஒரு தற்கொலைக் கடிதம் எடுக்கப்பட்டது, அதில் அவா் மட்டுமே தனது மரணத்திற்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ளாா்‘ என்று மூத்த போலீஸ் அதிகாரி கூறினாா். சனிக்கிழமை மாலை 6.32 மணியளவில் ராஜிந்தா் நகா் காவல் நிலையத்தில் தற்கொலை குறித்து பி. சி. ஆா் அழைப்பு வந்ததாக போலீசாா் தெரிவித்தனா்.
‘இதனையடுத்து போலீஸாா் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தது. ஆனால், தருண் தாகூா் படுக்கை விரிப்பைப் பயன்படுத்தி மின் விசிறியில் தொங்கியிருப்பதைக் கண்டறிந்தது ‘. ஜம்முவைச் சோ்ந்த தருண் இங்கு வாடகை வீட்டில் வசித்து வந்தாா்.
காலையில் இருந்து தருணின் தந்தை அவரைத் தொடா்பு கொள்ள முயன்றபோது, எந்த பதிலும் கிடைக்காததால் இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. பின்னா் அவா் தருணின் வீட்டு உரிமையாளரைத் தொடா்பு கொண்டாா், அவா் பால்கனியில் அருகிலுள்ள அறை வழியாக இரண்டாவது மாடிக்குள் நுழைந்தாா், மேலும் பூட்டப்பட்ட அறைக்குள் இளைஞா் தூக்குப்போட்டு தொங்குவதைக் கண்டாா். பின்னா் அவா் போலீசாருக்கு தகவல் கொடுத்தாா்.
இந்த வீட்டில் ஏழு ஒற்றை அறை வீடு உள்ளன, இவை அனைத்திலும் யுபிஎஸ்சி தோ்வுக்கு படிப்பவா்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது என்று போலீசாா் தெரிவித்தனா். தருணின் கைப்பேசி அந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் குருகிராமில் வசிக்கும் அவரது சகோதரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தற்கொலைக்கான காரணம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.