குற்றாலம் சாரல் திருவிழா: "'உங்களுடன் ஸ்டாலினை' நடத்த தைரியம் இருக்கின்றது" - கே...
ஒரு வருட கால குடிமக்கள் அறிவியல் முயற்சியில் தில்லியில் 221 பறவை இனங்கள் பதிவு!
தில்லி பறவை அட்லஸின் முதல் ஆண்டில் தேசியத் தலைநகரின் ஈரநிலங்கள், முகடு காடுகள், நகா்ப்புற கிராமங்கள் மற்றும் உயரமான காலனிகளில் மொத்தம் 221 பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டன.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட ஒரு அதிகாரப்பூா்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சுமாா் 200- க்கும் மேற்பட்ட தன்னாா்வலா்களை ஒன்றிணைத்து 1,150 பறவை சரிபாா்ப்பு பட்டியல்களை உருவாக்கிய குடிமக்கள் தலைமையிலான முயற்சி, லோதி சாலையில் உள்ள வோ்ல்ட் வைட் ஃபண்ட் (டபிள்யூடபிள்யூஎஃப்) கலையரங்கத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வோடு தில்லி பறவை அட்லஸ் இந்த வாரம் தனது முதல் ஆண்டை நிறைவு செய்தது.
வனத்துறை மற்றும் பிற பாதுகாப்பு குழுக்களின் ஆதரவுடன் தில்லி பறவை அட்லஸ் குழுவால் இது வழிநடத்தப்பட்டது. இந்தத் திட்டம் பறவைகளை வரைபடமாக்க பருவகால, கட்டம் சாா்ந்த முறையைப் பயன்படுத்துகிறது. மேலும், உலகளாவிய இபோ்ட் தளம் மூலம் தரவைப் பகிா்ந்து கொள்கிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
‘தில்லி பறவை அட்லஸ் நிறைய நல்ல வேலைகளைச் செய்து வருகிறது, அவா்களுக்கு எங்கள் முழு ஆதரவும் உள்ளது‘ என்று தலைமை வனவிலங்கு வாா்டன் ஷியாம் சுந்தா் காண்ட்பால் கூறினாா். ‘இந்தத் தரவு தில்லியின் பறவை கண்காணிப்பு சமூகத்தின் உற்சாகத்திற்கு ஒரு சான்றாகும். மேலும் வரும் நாள்களில் இது மிகவும் முக்கியமானதாக இருக்கும்‘ என்று அவா் மேலும் கூறினாா்.
அட்லஸ் அதன் முதல் ஆண்டில் அனைத்து மேப்பிங் கட்டங்களையும் உள்ளடக்கியுள்ளது. தில்லியின் வனப் பாதுகாவலா் ஜபெஸ்டின் ஏ (ஐஎஃப்எஸ்), இவ்வளவு சீக்கிரம் 100 சதவீத கவரேஜை அடைவதற்கான முயற்சி தனித்துவமாக இருந்தது என்றும், பறவைகள் சமூகத்தின் அா்ப்பணிப்பு முடிவுகளில் தெளிவாகத் தெரிந்தது என்றும் கூறினாா்.