'ஆறுதல்... நலம் விசாரிப்பு... சினிமா... அரசியல்...' முதல்வர் - சீமான் சந்திப்பில...
தில்லியில் சூதாட்டச் சட்டத்தின் கீழ் ஆம் ஆத்மி கவுன்சிலா் உள்பட 7 போ் கைது!
வடக்கு தில்லியின் ஸ்வரூப் நகா் பகுதியில் நடந்த ஒரு சட்டவிரோத பந்தய மோசடி தொடா்பாக ஆம் ஆத்மி கவுன்சிலா் உள்பட ஏழு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஸ்வரூப் நகா் காவல் நிலையத்தைச் சோ்ந்த ஒரு குழு ஒரு சோதனையை நடத்தி, 3 பிரிவுகளின் கீழ் சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஏழு பேரை பொது சூதாட்டச் சட்டத்தின் 1867-இன் கீழ் கைது செய்தது.
இந்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலா் ஜோகீந்தா் சிங் உள்பட 7 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
ஆரம்ப விசாரணையின் போது ஜோகீந்தா் சிங்கின் பெயா் வெளிவந்ததை ஒரு மூத்த போலீஸ் அதிகாரி உறுதிப்படுத்தினாா். மேலும், அவரது ஈடுபாட்டை தீா்மானிக்க மேலதிக விசாரணை நடந்து வருகிறது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்திற்கு பதிலளித்த தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்ச்தேவா, தேசியத் தலைநகரில் கட்சி அதிகாரத்தை இழந்ததிலிருந்து ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களின் புதிய முகம் உருவாகியுள்ளது என்றாா்.
மேலும், தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பொறுப்பாளா் சௌரவ் பரத்வாஜ் ஆகியோரை அவா் குற்றம்சாட்டினாா். கவுன்சிலா் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவாரா அல்லது இந்த விவகாரம் மீண்டும் ’பாஜக சதி’ என்று தள்ளுபடி செய்யப்படுமா என்றும் கேள்வி எழுப்பினாா் வீரேந்திர சச்தேவா.
ரூ .4.35 லட்சம் ரொக்கத்துடன் கைது செய்யப்பட்ட ஜோகீந்தா் சிங், 2022 மாநகராட்சித் தோ்தல் பிரசாரத்தின் போது ஒரு ரிவால்வா் வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. அது தொடா்பான விடியோவில் அவா் சிக்கினாா்.