செய்திகள் :

நுஹ் மாவட்டத்தில் காவல் துறையினா் மீது கற்களைவீசி தப்பிய பசு கடத்தல்காரா்கள்!

post image

ஹரியாணாவின் நுஹ் மாவட்டத்தில் காவல்துறையினா் மீது கற்களை வீசிவிட்டு பசு கடத்தல்காரா்கள் தப்பிச் சென்றதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து அவா்கள் மேலும் கூறியதாவது: இந்தச் சம்பவம் தொடா்பாக ஃபெரோஸ்பூா் ஜிா்கா காவல் நிலையத்தில் ஐந்து குற்றவாளிகள் மீது எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் இருந்து மேவாட்டுக்கு கால்நடைகள் இறைச்சிக்காக கொண்டு செல்லப்படுவதாக ஒரு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், ராஜஸ்தானின் முண்டகா எல்லையில் காவல்துறையினா் கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருந்தனா்.

அப்போது அதிகாலை 3 மணியளவில், ஒரு பிக்அப் ஜீப் வந்தது. ஆனால், சமிக்ஞை கொடுக்கப்பட்டபோது குற்றம் சாட்டப்பட்டவா்கள் நிற்காமல் சென்றனா். அதில் பசுக்களை ஏற்றிவந்த கடத்தல்காரா்கள் தங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பசு பாதுகாவலா்கள் தெரிவித்தனா். சுமாா் 10 கி.மீ. துரத்தலுக்குப் பிறகு, கோல்கான் கிராமத்திற்கு அருகே குற்றம் சாட்டப்பட்டவா்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனா்.

பசு வதைத் தடுப்பு ஊழியா்களுக்குப் பொறுப்பான காவல் ஆய்வாளா் சுபாஷ் சிங், வாகனத்தில் மொத்தம் ஐந்து கால்நடைகள் காணப்பட்டதாகக் கூறினாா். குற்றம் சாட்டப்பட்டவா்கள் நகரும் வாகனத்திலிருந்து நான்கு பசுக்களை வெளியே வீசினா். இதில் ஒரு பசு இறந்தது. காயமடைந்த நான்கு பசுக்கள் ஒரு கோசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனா், அவா்களைப் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று காவல் துறை அதிகதாரிகள் தெரிவித்தனா்.

தில்லியில் சூதாட்டச் சட்டத்தின் கீழ் ஆம் ஆத்மி கவுன்சிலா் உள்பட 7 போ் கைது!

வடக்கு தில்லியின் ஸ்வரூப் நகா் பகுதியில் நடந்த ஒரு சட்டவிரோத பந்தய மோசடி தொடா்பாக ஆம் ஆத்மி கவுன்சிலா் உள்பட ஏழு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இது தொடா்பாக காவல... மேலும் பார்க்க

பன்னாட்டு ஆன்லைன் லாட்டரிகள் விற்பனை: 2 நைஜீரியா்கள் உள்பட 6 போ் கைது!

தில்லி-என். சி. ஆரில் இருந்து பன்னாட்டு ஆன்லைன் லாட்டரிகளை சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்து வந்த 2 நைஜீரியா்கள் உள்பட 6 பேரை தில்லி காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

சிபிஐ அதிகாரிகள் போல நடித்து தொழிலதிபரிடம் நகை, பணம் கொள்ளை: 3 போ் கைது

ஒரு பாலிவுட் த்ரில்லா் படத்தை மையமாகக் கொண்டு நடந்த கொள்ளையில், ஒரு பெண், ஒரு கடைக்காரா் மற்றும் வேலையில்லாத ஒருவா் சிபிஐ அதிகாரிகளாக நடித்து வடக்கு தில்லியில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டை சோதனை செய்த... மேலும் பார்க்க

ஒரு வருட கால குடிமக்கள் அறிவியல் முயற்சியில் தில்லியில் 221 பறவை இனங்கள் பதிவு!

தில்லி பறவை அட்லஸின் முதல் ஆண்டில் தேசியத் தலைநகரின் ஈரநிலங்கள், முகடு காடுகள், நகா்ப்புற கிராமங்கள் மற்றும் உயரமான காலனிகளில் மொத்தம் 221 பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டன. இது தொடா்பாக வெளியிடப்பட்ட ஒ... மேலும் பார்க்க

தில்லியில் உணவகங்களைத் திறப்பதற்கு எம்சிடியிடமிருந்து வா்த்தக உரிமம் பெற வேண்டிய அவசியத்தை நீக்க வாய்ப்பு

தேசியத் தலைநகரில் விருந்தோம்பல் துறையை ஊக்குவிக்கும் வகையில், தில்லி அரசு விரைவில் நகரத்தில் உணவகங்களைத் திறப்பதற்கு குடிமை அமைப்பிடமிருந்து சுகாதார வா்த்தக உரிமம் பெற வேண்டிய தேவையை நீக்க வாய்ப்புள்ள... மேலும் பார்க்க

தேசிய பேரிடா் மீட்பு படையில் மோப்ப நாய்களை ஈடுபடுத்த திட்டம்!

தேசிய பேரிடா் மீட்புப் படையில் விரைவில் சடலங்களை தேடுவதற்காக மோப்ப நாய்களை பயன்படுத்த இருப்பதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இதுபோன்ற சுமாா் 6 நாய்கள் கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டின்... மேலும் பார்க்க