ஆபரேஷன் சிந்தூர்: நாட்டின் ராணுவ வலிமையை உலக நாடுகளே வியந்தன - பிரதமர் மோடி
குற்றாலம் சாரல் திருவிழா: "'உங்களுடன் ஸ்டாலினை' நடத்த தைரியம் இருக்கின்றது" - கே.கே.எஸ்.எஸ்.ஆர்
தென்காசி மாவட்டத்தில் குற்றால சீசனையொட்டி ஆண்டு தோறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சாரல் திருவிழா கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான சாரல் திருவிழா 20-ம் தேதியான நேற்று தொடங்கி 27-ம் தேதி வரை 8 நாட்கள் நடைபெறுகிறது. இதில் தோட்டக்கலைத் துறை சார்பில் 4 நாள்கள் மலர் கண்காட்சியும் நடைபெறுகிறது.
இந்த எட்டு நாளும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் பள்ளியில், கல்லூரி மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
இதன் தொடக்க நிகழ்ச்சியாக குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் மங்கல இசை மற்றும் பரதநாட்டியம் நிகழ்ச்சியுடன் சாரல் திருவிழாவை வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் குத்து விளக்கேற்றித் தொடங்கி வைத்தார்.

பின்னர் தமிழ்நாடு அரசு பொறுப்பேற்று நான்கு ஆண்டுகளில் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் மக்களின் நலனிற்காக நிறைவேற்றப்பட்ட பல முக்கிய நலத்திட்டங்கள், முத்திரை பதிக்கும் திட்டங்களைத் தொகுத்து புத்தக வடிவில் தயாரிக்கப்பட்ட நான்கு ஆண்டு சாதனை மலரை வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் எனப் பல கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசுகையில், “இந்த ஆண்டு நடைபெறும் சாரல் திருவிழாவானது சாரல் மழையுடன் சிறப்பாகத் தொடங்கியுள்ளது. உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தில் தமிழகம் முழுவதும் பத்தாயிரம் முகாம்கள் அமைக்கப்பட்டு மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

இந்த மனுக்களை வாங்குவது பெரிய விஷயம் இல்லை, இந்த மனுக்களுக்கான எதிர்பார்ப்புகளை எங்களால் செய்ய முடியும் என்ற காரணத்தினால் செய்து வருகிறோம். அந்த வகையில் உங்களுடன் ஸ்டாலினை நடத்துவதற்கு தமிழக முதல்வருக்குத் தைரியம் இருக்கின்ற காரணத்தினால் செய்து வருகிறோம்" என்று குறிப்பிட்டார்.
மேலும் சாரல் திருவிழா நிகழ்ச்சியில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.