செய்திகள் :

சட்டமன்றத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடிய மகா. அமைச்சர்? பதவி விலக வலியுறுத்தும் எதிர்க்கட்சிகள்

post image

மகாராஷ்டிரா தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) சட்டமன்ற உறுப்பினர் ரோஹித் பவார் இரண்டு வீடியோக்களை சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் மாநில வேளாண்துறை அமைச்சர் மாணிக்ராவ் கோகடே சட்டமன்ற கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது தனது மொபைல் போனில் ரம்மி விளையாடிக்கொண்டிருந்தார்.

இது குறித்து ரோஹித் பவார் வெளியிட்டுள்ள பதிவில், ''எண்ணற்ற வேளாண் பிரச்னைகள் நிலுவையில் இருக்கின்றன. தினமும் 8 விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர். அதனைத் தடுக்க அமைச்சருக்கு நேரம் இல்லை. ஆனால் ரம்மி விளையாடுவதற்கு மட்டும் அமைச்சருக்கு நேரம் இருக்கிறது.

இது போன்ற அமைச்சர்கள் மற்றும் அரசாங்கம் விவசாயிகளின் பயிர்க் காப்பீடு, கடன் தள்ளுபடி, குறைந்த பட்ச ஆதரவு விலை கோரிக்கைகளைக் கேட்பார்களா? ஏழை விவசாயிகளின் வயல்களுக்கு எப்போதாவது வாருங்கள் மகாராஜா'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இக்குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் மாணிக்ராவ் கூறுகையில், ''கேமரா எங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது சட்டமன்றத்திலிருந்து கொண்டு ஏன் ரம்மி விளையாட வேண்டும். நான் சட்டமேலவையில் இருந்தேன்.

சட்டமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள யூடியூப்பைப் பார்க்க எனது மொபைல் போனை எடுத்தேன். அந்நேரம் ரம்மி விளையாட்டு தொடர்பான விளம்பரம் வந்துவிட்டது. அதிலிருந்து வெளியில் வர முயன்றேன். ஆனால் முடியவில்லை.

அதிலிருந்து வெளியில் வர இரண்டு முறை முயன்றேன். ஆனால் எப்படி வெளியில் வருவது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அடுத்த சில விநாடிகளில் வெளியில் வந்துவிட்டேன். எதிர்க்கட்சிகள் முழுமையான வீடியோவைப் பார்க்காமல் என்னைக் குற்றம் சாட்டுகின்றன. முழுமையான வீடியோவைப் பார்த்தால் நான் அதிலிருந்து வெளியில் வர முயன்றது தெரியும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜய் கூறுகையில், ''விவசாயிகள் செத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அமைச்சர் ரம்மி விளையாடிக்கொண்டிருக்கிறார். விவசாயிகள் அரசுக்குப் பாடம் கற்றுக்கொடுக்கவேண்டும்'' என்று தெரிவித்தார்.

வீடியோ வெளியானதைத் தொடர்ந்து லாத்தூரில் தேசியவாத காங்கிரஸ் (அஜித்பவார்) மாநிலத் தலைவர் சுனில் தட்கரே பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அமைச்சர் மாணிக்ராவ் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று கோரி, சாவா சங்கட்டனா என்ற மராத்தா அமைப்பு சுனில் தட்கரே மீது விளையாடப் பயன்படும் சீட்டுக்களை எடுத்து வீசினர்.

அஜித் பவார்
அஜித் பவார்

இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. மாணிக்ராவ் துணை முதல்வர் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்.

மகாராஷ்டிராவில் சரத்பவார் மற்றும் துணை முதல்வர் அஜித்பவார் ஆகியோர் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மீண்டும் ஒன்றாக இணைவது குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் சுனில் தட்கரே அளித்திருந்த பேட்டியில், ''பா.ஜ.கவிடம் கலந்து பேசித்தான் இரண்டு அணிகளும் ஒன்று சேருவது குறித்து முடிவு செய்ய முடியும்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

ஓரணியில் தமிழ்நாடு: `மக்களிடம் OTP விவரங்களைக் கேட்கக் கூடாது!' - உயர் நீதிமன்றம் தடை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில் இப்போதே `ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின்பேரில் மாநிலம் முழுவதும் வீடு வீடாகச் சென்று உறுப்பினர்கள... மேலும் பார்க்க

`நடைபயிற்சியின் போது லேசான மயக்கம்' - அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதி

முதல்வர் ஸ்டாலின் இன்று காலையில் வழக்கமான நடைபயிற்சி மேற்கொண்டபோது அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டதைத்தொடர்ந்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.அபோல்லோ மருத்துவமனை அறிக்க... மேலும் பார்க்க

`மாநில அரசின் கடமை; முதல்வர் தலையிட்டு தீர்வு காண்பார்கள் என்று நம்புகிறேன்!’ - ஜோதிமணி

"2024-2025 ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளுக்கு ஆறு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் சாத்தியக்கூறு கூட வரவில்லை. கரூர் சட்டமன்றத் தொகுதிக்குள் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒதுக்கீடு செய்யப்பட நி... மேலும் பார்க்க

தர்மஸ்தலா கோயில்: 100-க்கும் மேற்பட்ட பெண்கள் புதைப்பு? குவியும் புகார்கள்; புலனாய்வுக் குழு அமைப்பு

கர்நாடகா மாநிலம் தட்சின கன்னடாவில் உள்ளது தர்மஸ்தலா. இங்கே மஞ்சு நாதர் கோயில் உள்ளது. இது மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும்.தூய்மைப் பணியாளரின் புகார் கடந்த ஜூன் மாதம், தர்மஸ்தலா மஞ்சு நாதர் கோயில்... மேலும் பார்க்க

`லாக்கப் டெத், கீழடி அறிக்கை, மகளிர் இடஒதுக்கீடு’ - நாடாளுமன்றத்தில் அதிமுக எழுப்பும் விவகாரங்கள்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 21) முதல் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 21 வரை ஒரு மாத காலம் நடைபெறவிருக்கிறது.இதனை முன்னிட்டு, நேற்று நாடாளுமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்... மேலும் பார்க்க