செய்திகள் :

20 ஆண்டு.. 150 சொகுசு கார்கள்! ஒரே ஒரு காரால் சிக்கிய பல நாள் திருடன்!!

post image

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 150-க்கும் மேற்பட்ட சொகுசு காா்களை லாவகமாகத் திருடி சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிக்காமல் இருந்த ராஜஸ்தானைச் சேர்ந்த ஷெகாவத் என்பவர் கைது செய்யப்பட்டார்.

பல மாநில காவல்துறையினருக்கும் சிக்காமல் இருந்து வந்த குற்றவாளி, கைது செய்யப்படுவதற்கு ஒரே காரணம், சென்னை அண்ணா நகரில் நிறுத்தப்பட்டிருந்த விலை உயர்ந்த சொகுசு காரைத் திருடியதுதான். அங்கு பதிவான சிசிடிவி காட்சிதான், அவரை அடையாளம் காண உதவியிருக்கிறது.

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் 150-க்கும் மேற்பட்ட சொகுசு காா்களை திருடியதாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த நபரை சென்னையில் போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை அண்ணா நகா் கதிரவன் காலனி பகுதியைச் சோ்ந்தவா் எத்திராஜ் ரத்தினம். இவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு காா் கடந்த ஜூன் 10-ஆம் தேதி திருடப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில், திருமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தினா்.

சிசிடிவி காட்சியில் பதிவான நபரின் அடையாளங்களை பதிவு செய்து, சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் கண்காணித்து வந்தனர். அப்போது, கார் திருட்டில் ஈடுபட்ட நபர் புதுச்சேரியில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்தத் தகவலையடுத்து, அவரைத் தொடர்ந்து கண்காணித்து வந்திருக்கிறார்கள்.

அப்போதுதான், கடந்த சில நாள்களுக்கு முன்பு புதுச்சேரியில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்திய சொகுசுக் காரை திருட காத்திருந்தபோது காவல்துறையினர் சுற்றிவளைத்துக் கைது செய்திருக்கிறார்கள்.

உடனடியாக அவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு அவரிடம் நடத்திய விசாரணையில், அவா் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த எம்பிஏ பட்டதாரி என்றும், அவரது பெயர் சட்டேந்திர சிங் ஷகாவாத் (44) என்பதும் தெரியவந்தது.

பொதுவாக, ஒவ்வொரு மாநிலத்துக்கும் செல்லும் அவர், அங்குள்ள காா் பழுது நீக்கும் மையங்களில் விடப்படும் விலை உயா்ந்த சொகுசு காா்களை நோட்டமிடுவாராம். யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்கும்போது, பழுதுநீக்கும் மையங்களின் உள்ளே சென்று ஒரு காரை தேர்வு செய்து அந்தக் காரில் ஜிபிஎஸ் கருவியை பொருத்திவிடுவாராம்.

பின்னா், காா் எங்கு உள்ளது என்பதை ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணித்து யாரும் இல்லாத நேரத்தில் காரை லாவகமாகத் திருடி, எந்த மாநிலத்திலிருந்தும் நேராக ராஜஸ்தான் கொண்டு சென்று, அங்கிருந்து நேபாளம் எடுத்துச் சென்று விற்பனை செய்து வந்துள்ளார். அதனால்தான் அவரை எந்த மாநிலத்திலும் பிடிக்க முடியாமல் இருந்து வந்துள்ளது.

அதுபோலவே, எத்திராஜ் ரத்தினத்தின் சொகுசு காா் உள்பட 4 பேரின் காரை பழுதுநீக்கும் மையங்களில் நுழைந்து ஜிபிஎஸ் கருவி பொருத்தி திருடியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சட்டேந்திர சிங் ஷகாவாத், தமிழகம் மட்டுமின்றி கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் 150-க்கும் மேற்பட்ட சொகுசு காா்களை கடந்த பல ஆண்டுகளாகத் திருடி நேபளாத்தில் விற்பனை செய்துவந்தது தெரியவந்ததைத் தொடர்ந்து அது தொடர்பான வழக்குகளும் சூடுபிடித்துள்ளன. கார்களை பறிகொடுத்த பலரும் காவல்நிலையங்களில் தங்களது புகார்கள் குறித்து கேட்டறிந்து வருகிறார்கள்.

சீமானுடன் பேச்சுக்கு தயாராக இல்லை! -உச்ச நீதிமன்றத்தில் விஜயலக்‌ஷ்மி திட்டவட்டம்

புது தில்லி: சீமான் மீது விஜயலக்‌ஷ்மி அளித்த பாலியல் புகாரை ரத்து செய்யக்கோரி, சீமான் தரப்பிலிருந்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று(ஜூலை 21) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போ... மேலும் பார்க்க

அச்சுதானந்தன் மறைவு: முதல்வர் இரங்கல்

கேரள முன்னாள் முதல்வரும் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான அச்சுதானந்தன் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் முதல்வர் வெளியிட்டுள்ள பதிவில்,கே... மேலும் பார்க்க

முதல்வர் மு.க.ஸ்டாலின் பூரண நலம் பெற வேண்டும்! -எடப்பாடி பழனிசாமி

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பூரண நலம் பெற விழைகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(திங்கள்கிழமை) காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது லேசாக தலைசுற்றல் ஏ... மேலும் பார்க்க

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா பதவியேற்பு!

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் 54-ஆவது தலைமை நீதிபதியாக மநிந்திரா மோகன் ஸ்ரீவாஸ்தவா பதவியேற்றார். அவருக்கு தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர். என். ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.ஆளுநர் மாளிகையில் இன்று... மேலும் பார்க்க

முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனைய... மேலும் பார்க்க

முக்கிய தொடர்களின் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் முக்கிய தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இத்தொலைக்காட்சியில் சின்னஞ்சிறு கிளியே என்ற புதிய தொடர் ஒளிபரப்பாவதால், இன்று முதல் ஒளிபரப்பு நே... மேலும் பார்க்க