Jagdeep Dhankar: குடியரசு துணை தலைவர் பதவியிலிருந்து ஜெகதீப் தன்கர் ராஜினாமா! - ...
முதல்வர் மு.க.ஸ்டாலின் பூரண நலம் பெற வேண்டும்! -எடப்பாடி பழனிசாமி
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பூரண நலம் பெற விழைகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(திங்கள்கிழமை) காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது லேசாக தலைசுற்றல் ஏற்படவே, அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், மன்னார்குடியில் மக்களைச் சந்தித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ”முதல்வர் மு. க. ஸ்டாலின் பூரண நலம் பெற விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க:முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார்: துரைமுருகன்