செய்திகள் :

Jagdeep Dhankar: குடியரசு துணை தலைவர் பதவியிலிருந்து ஜெகதீப் தன்கர் ராஜினாமா! - காரணம் என்ன?

post image

குடியரசுத் துணைத் தலைவர் பதவியிலிருந்து ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார்.

உடல்நலக் காரணங்களைக் கருத்தில் கொண்டு மருத்துவ ஆலோசனைக்காக பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

Jagdeep Dhankar
Jagdeep Dhankar

74 வயதான ஜெகதீப் தன்கர் கடந்த 2022-ம் ஆண்டு குடியரசுத் துணைத் தலைவராகப் பதவியேற்றார்.

மாநிலங்களவையின் தலைவரான இவர் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டிருக்கிறார்.

ராஜினாமா குறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், "உடல்நலத்தை முன்னுரிமைப்படுத்தவும், மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றவும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 67(அ) இன் படி, நான் இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக ராஜினாமா செய்கிறேன்.

மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களின் அசைக்க முடியாத ஆதரவிற்கும், எனது பதவிக்காலத்தில் நாங்கள் பேணிய இனிமையான பணி உறவிற்கும் எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெகதீப் தன்கர்
ஜெகதீப் தன்கர்

மாண்புமிகு பிரதமர் மற்றும் மதிப்புமிக்க அமைச்சரவைக் குழுவிற்கு எனது ஆழ்ந்த நன்றியை வெளிப்படுத்துகிறேன்.

பிரதமரின் ஒத்துழைப்பும் ஆதரவும் மதிப்புமிக்கவையாக இருந்தன, மேலும் இந்தப் பதவியில் இருந்தபோது நான் பலவற்றைக் கற்றுக்கொண்டேன்.

மாண்புமிகு பிரதமர் மற்றும் மதிப்புமிக்க அமைச்சரவைக் குழுவிற்கு எனது ஆழ்ந்த நன்றியை வெளிப்படுத்துகிறேன். பிரதமரின் ஒத்துழைப்பும் ஆதரவும் மதிப்புமிக்கவையாக இருந்தன, மேலும் இந்தப் பதவியில் இருந்தபோது நான் பலவற்றைக் கற்றுக்கொண்டேன்.

மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரிடமிருந்து பெற்ற அன்பு, நம்பிக்கை, மற்றும் பாசம் எப்போதும் என் நினைவில் நீங்காமல் பதிந்திருக்கும்.

எங்கள் மாபெரும் ஜனநாயகத்தில் துணைக் குடியரசுத் தலைவராகப் பெற்ற மதிப்புமிக்க அனுபவங்களுக்கும் நுண்ணறிவுகளுக்கும் நான் ஆழ்ந்த நன்றியுடையவனாக இருக்கிறேன்.

Jagdeep Dhankar Resignation
Jagdeep Dhankar Resignation

இந்த முக்கியமான காலகட்டத்தில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றத்தையும், முன்னெப்போதும் இல்லாத வியத்தகு வளர்ச்சியையும் கண்டு, அதில் பங்கேற்கும் பாக்கியம் கிடைத்தது ஒரு திருப்தியும் பெருமையுமாகும்.

நம் நாட்டின் வரலாற்றில் இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் காலத்தில் பணியாற்றியது உண்மையிலேயே ஒரு கௌரவமாகும்.

இந்த மதிப்புமிக்க பதவியை விட்டு வெளியேறும்போது, பாரதத்தின் உலகளாவிய உயர்வு மற்றும் அபரிமிதமான சாதனைகளைப் பற்றி பெருமிதம் கொள்கிறேன், மேலும் அதன் பிரகாசமான எதிர்காலத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கிறேன்," எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

189 பேர் உயிரிழந்த மும்பை ரயில் குண்டுவெடிப்பு; தண்டனை பெற்ற 12 பேர் விடுதலை - உயர் நீதிமன்றம்

மும்பையில் கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி புறநகர் ரயில்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. பயணிகள் கூட்டம் அதிகமான மாலை 6.24 மணிக்கு தொடங்கி அடுத்த 10 நிமிடத்தில் மாட்டுங்கா, மாகிம், பாந... மேலும் பார்க்க

'ஆறுதல்... நலம் விசாரிப்பு... சினிமா... அரசியல்...' முதல்வர் - சீமான் சந்திப்பில் நடந்தது என்ன?

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும் முதல்வர் ஸ்டாலினின் அண்ணனுமான மு.க. முத்து மறைந்ததையடுத்து, ஸ்டாலினைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ... மேலும் பார்க்க

``அமலாக்கத்துறை ஒன்றும் சூப்பர் போலீஸ் அல்ல'' - உயர் நீதிமன்றம் காட்டம்.. காரணம் என்ன?

கடந்த 2006 ஆம் ஆண்டு நிலக்கரி ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சென்னையைச் சேர்ந்த ஆர்.கே.எம். பவர்ஜென் நிறுவனத்துக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.அதேபோல அமலாக்க... மேலும் பார்க்க

`அரசு, நீதிமன்ற ஆவணங்களை மொழிப்பெயர்க்க AI பயன்படுத்துவது ஆபத்து' - கேரள நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் எல்லாத் துறைகளிலும் ஊடுருக் கொண்டிருக்கிறது. எங்கெல்லாம் அதைப் பயன்படுத்தெல்லாம் என்ற பயிற்சிப் பட்டறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமிருக்கின்றன. அதேசமயம் இந்த 'A... மேலும் பார்க்க

PMK: ``வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு; படை திரள்வோம்'' - பாமக அன்புமணி ராமதாஸ்

கடந்த அதிமுக ஆட்சியில் 2019-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கான 20 சதவிகித இட ஒதுக்கீட்டிலிருந்து வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள் ஒதுக்கீட்டு மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார் அப்போதைய ... மேலும் பார்க்க

"ரப்பர் தொழிலார்களின் குறைகளை யாருமே கேட்கவில்லை; ஆனா..." - புதிய அதிகாரிக்கு தொழிற்சங்கம் பாராட்டு

தமிழ்நாடு அரசின் ரப்பர் கழகத்தால் நிர்வகிக்கப்படும் ரப்பர் தோட்டங்கள் பெரும்பாலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளன. கீரிப்பாறை, மணலோடை, பரளியாறு, காளிகேசம், சிற்றார், மருதம்பாறை, குற்றியார், கோத... மேலும் பார்க்க