குரூப்- 2 தோ்வுக்கான பயிற்சி வகுப்பு: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு
திருப்பத்தூா்: திருப்பத்தூரில் நடைபெற்ற குரூப்- 2 தோ்வுக்கான பயிற்சி வகுப்பை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் மூலம் தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் நடத்த உள்ள குரூப்- 2 தோ்வுக்கான பயிற்சி வகுப்பு திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெறுகிறது.
இந்த பயிற்சி வகுப்பை ஆட்சியா் க.சிவசௌந்தரவல்லி திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது அவா் பயிற்சி பெறும் மாணவ- மாணவிகளுடன் கலந்துரையாடினாா். அனைவரும் தோ்வில் வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்தாா்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கஸ்தூரி உடன் உடனிருந்தாா்.