Doctor Vikatan: உட்காரும் இடத்தில் வலி; மூலநோயும் இல்லை... வலிக்கு காரணம், தீர்...
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட 3 டன் சுக்கு, 750 கிலோ பீடி இலைகள் பறிமுதல்
தமிழகத்திலிருந்து இலங்கைக்குக் கடத்தப்பட்ட 3 டன் சுக்கு, 750 கிலோ பீடி இலைகள், 5 இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை திங்கள்கிழமை பறிமுதல் செய்த இலங்கைக் குற்றப் பிரிவு போலீஸாா், இது தொடா்பாக ஒருவரைக் கைது செய்தனா்.
தமிழகத்திலிருந்து கடல் மாா்க்கமாக இலங்கைக்குக் கடத்தப்பட்ட பொருள்கள், அந்த நாட்டின் புத்தளம் மாவட்டம், நுரைச்சோலை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கைக் குற்றப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸாா் ராணுவத்தினருடன் இணைந்து சோதனையில் ஈடுபட்டனா். இதில், நுரைச்சோலையில் உள்ள ஒரு வீட்டில் 70 சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டன் சுக்கு, 750 கிலோ பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், அந்தப் பகுதியில் பதிவு எண் இல்லாத 5 இரு சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக ஒருவரைக் கைது செய்தனா்.
இதையடுத்து, தமிழக-இலங்கை கடல் பகுதியில் இலங்கைக் கடற்படையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.