செய்திகள் :

Vice President: ராஜினாமா செய்த ஜக்தீப் தன்கர்.. அடுத்த துணை குடியரசுத் தலைவர் யார்?

post image

2022-ம் ஆண்டில் இருந்து நேற்று வரை, துணை குடியரசுத் தலைவராக இருந்து வந்தார் ஜக்தீப் தன்கர்.

'உடல்நலத்தை முன்னுரிமைப்படுத்தவும், மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றவும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 67(அ) இன் படி, நான் இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக ராஜினாமா செய்கிறேன்' என்று நேற்று ஜக்தீப் தன்கர் தனது ராஜினாமாவை அறிவித்தார்.

ஜக்தீப் தன்கர்
ஜக்தீப் தன்கர்

இவரது பதவிகாலம் முடிய இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளது. இந்த நிலையில், ஜக்தீப் தன்கர் திடீரென்று ராஜினாமா செய்துள்ளது அடுத்த துணை குடியரசுத் தலைவர் யார் என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.

அதுவரை...

அடுத்த துணை குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை, ராஜ்யசபாவின் துணை தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் துணை குடியரசுத் தலைவர் ஆற்ற வேண்டிய அலுவல் பணிகளைத் தொடர்வார்.

பிறகு என்ன நடக்கும்?

அடுத்து, தேர்தல் ஆணையம் துணை குடியரசுத் தலைவருக்கான தேர்தலை அறிவிக்கும். இந்த தேர்தல் எவ்வளவு விரைவாக நடக்குமோ, அவ்வளவு சீக்கிரம் நடத்தப்படும். ஆனால், இந்தத் தேர்தல் அடுத்த 60 நாள்களுக்குள் நடந்து முடிந்துவிட வேண்டும்.

துணை குடியரசுத் தலைவர் ஆக என்ன தகுதிகள் வேண்டும்?

35 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.

இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.

ராஜ்யசபா உறுப்பினராகும் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

ஹரிவன்ஷ் நாராயண் சிங்
ஹரிவன்ஷ் நாராயண் சிங்

யார் அடுத்த துணை குடியரசுத் தலைவராக வாய்ப்பு?

அடுத்த துணை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர் அனுபவம் உள்ளவராகவும், நம்பகமானவராகவும், சர்ச்சைகளில் சிக்காதவராகவும் இருப்பார் என்று பாஜக தரப்பில் கூறப்படுகிறது.

இவை தற்போதைய ராஜ்யசபாவின் துணை தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்கிற்கு பொருந்தும். அதனால், இவர் அடுத்த துணை குடியரசுத் தலைவர் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது.

2020-ம் ஆண்டு முதல் இந்தப் பதவியை வகித்து வரும் இவர், பாஜகவின் நம்பிக்கையை பெற்றுள்ளார்.

புதுச்சேரி: `அரசு வேலை' ஆசை காட்டி மோசடி; சுருட்டிய பணத்தில் சமூக ஆர்வலராக வலம் வந்த பாஜக பிரமுகர்!

`மத்திய அமைச்சர் மூலமாகவே மூவ் செய்கிறோம்’புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் கிளை காரைக்கால் கோயில்பத்து பகுதியில் செயல்பட்டு வருகிறது. அங்கு கட்டி முடிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை இன்னும் சி... மேலும் பார்க்க

`அரசியலில் எங்கோ, ஏதோ ஒன்று நடக்கிறது..' -ஜக்தீப் தன்கர் ராஜினாமா குறித்து காங். தலைவர் ஹரிஷ் ராவத்

நேற்று துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.இது குறித்து உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் மற்றும் காங்கிரஸ் தலைவருமான ஹரிஷ் ராவத், "இந்த செய்தி மிகவும் அதிர்ச்ச... மேலும் பார்க்க

US: மார்டின் லூதர் கிங் கொலை ஆவணத்தை வெளியிட்ட ட்ரம்ப் அரசு; அவரது மகன், மகள் கூறுவது என்ன?

மார்டின் லூதர் கிங் - அமெரிக்காவின் சிவில் உரிமை ஆர்வலர்.டென்னசி மெம்பிஸில், 1968-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், மார்டின் லூதர் கிங் சுட்டு கொல்லப்பட்டார்.இவரது கொலை சம்பந்தமான ஆவணத்தை நேற்று ட்ரம்ப் அரசாங்கம... மேலும் பார்க்க

Doctor Vikatan: உட்காரும் இடத்தில் வலி; மூலநோயும் இல்லை... வலிக்கு காரணம், தீர்வு என்ன?

Doctor Vikatan: என் வயது 34. ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறேன். எனக்கு கடந்த சில தினங்களாக உட்காரும் இடத்தில் கடுமையான வலி இருக்கிறது. அது மூலநோய் இல்லை என்பதுஉறுதி. டெயில்போன் வலியாகஇருக்கலாம் என்கிற... மேலும் பார்க்க

முதலமைச்சருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு காரணம் என்ன? - உதயநிதி பதில்

தமிழ்நாடு முதலமைச்சர் உடல்நிலை காரணமாக நேற்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இன்னும் மூன்று நாள்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும். அவருக்கு சில மருத்துவப் பரிசோதனை செய்யப்பட வேண்டு... மேலும் பார்க்க