ஹர்மன்ப்ரீத் சதம்: தொடரை வெல்ல இங்கிலாந்துக்கு 319 ரன்கள் இலக்கு!
Pawan Kalyan: "ஒரு தோல்விப் படத்தைக் கொடுத்ததுதான் நான் செய்த ஒரே தவறு!" - பவன் கல்யாண் பளீச்
இயக்குநர் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஹரி ஹர வீரமல்லு' படம், நாளை மறுநாள் (ஜூலை 24) வெளியாகவிருக்கிறது.
இந்தப் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் பவன் கல்யாண் பங்கேற்க மாட்டார் என இப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அறிவித்திருந்தார்.

ஆனால், திடீரென இன்று நடைபெற்ற படத்தின் செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்துகொண்டு பலரை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து நேற்று மாலை நடைபெற்ற படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்விலும் அவர் கலந்துகொண்டார்.
அங்கு பவன் கல்யாண் பேசுகையில், "நான் விழுந்தாலும், எழுந்தாலும், ரசிகர்கள், 'அண்ணா, நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்' என்று சொல்லி எனக்குத் தைரியம் அளிக்கிறார்கள். என்னிடம் ஆயுதங்கள் இருக்கிறதா?
என்னிடம் ரவுடிகள் இருக்கிறார்களா? என் இதயத்தில் இருக்கும் ரசிகர்களைத் தவிர எனக்கு யாருமே இல்லை.
இத்தனை வருடங்கள் திரையுலகிலிருந்தாலும், எனக்கு அதே தைரியமும் உறுதியும் இருக்கிறது.
நான் ஒருபோதும் பணத்திற்கு முன்னுரிமை கொடுக்கவில்லை. உறவுகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பேன்.

என் ரசிகர்கள் எப்போதும் என்னை ஆதரித்து வந்திருக்கிறார்கள். பவன் ஒருபோதும் திரைப்பட ரெகார்டுகளை விரும்பியதில்லை. நான் நடிகனாக வேண்டும் என்று விரும்பவில்லை.
சராசரி மனிதனாக வாழ வேண்டும் என்பதே என் எண்ணம். ஹரி ஹர வீரமல்லு படத்தை நான் பல சிரமங்களுக்கு மத்தியில் உருவாக்கினேன்.
எனக்கு பெயர் இருந்தாலும், பணம் கிடைப்பதில்லை. இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்று விரும்பினேன். நான் கீழிருந்து வந்தவன்.
நான் செய்த ஒரே தவறு ஒரு தோல்விப் படத்தைக் கொடுத்தது. அதன்பின் திரையுலகில் எனக்கு நிலையான இடம் கிடைக்கவில்லை.
அந்த நேரத்தில் இயக்குநர் த்ரிவிக்ரம் என்னைத் தேடி வந்தார். அவர் என் நண்பர். அடுத்தடுத்து படங்கள் நடித்துக்கொண்டிருந்தால், என் மனைவியையும் குழந்தைகளையும் யார் கவனிப்பார்கள்?
என் கட்சியை யார் நடத்துவார்கள்? நான் நாட்டின் மீது பைத்தியமாக இருக்கிறேன். சமூகப் பொறுப்பு மீது பைத்தியமாக இருக்கிறேன்.
அதே சமயம், ரசிகர்களின் மீதும் பைத்தியமாக இருக்கிறேன்," என்றவர், "இப்படியொரு விழாவை நடத்துவதற்குப் பெரும் அழுத்தத்தை எதிர்கொண்டோம்.
இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்த தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மற்றும் காவல்துறைக்கு நன்றி. கிட்டத்தட்ட 30 வருடங்களாக திரையுலகில் இருக்கிறேன்.
நான் வயதாகியிருக்கலாம், ஆனால் என் இதயத்திலுள்ள அன்பு இறக்கவில்லை. இந்தப் படத்தை மிகவும் கடினமான காலத்தில் செய்தேன். ஜானி படம் தோல்வியடைந்தாலும், ரசிகர்கள் என்னைக் கைவிடவில்லை" என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...