வாணியம்பாடி: மலைக் குன்றிலிருந்து சாலையில் சரிந்து விழுந்த ராட்சதப் பாறையால் பரப...
Google: சர்வதேச கணித ஒலிம்பியாட்டில் தங்கம் வென்று அசத்திய AI - விவரம் என்ன?
கூகுளின் செயற்கை நுண்ணறிவு (AI) ஆராய்ச்சி குழுவான டீப்மைண்ட், உலகின் மிக உயரிய இளம் கணிதவியலாளர்களுக்கான போட்டியில் பங்கேற்றுள்ளது. சர்வதேச கணித ஒலிம்பியாட்டில் (IMO) கூகுளின் செயற்கை நுண்ணறிவு தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளது.
முதல் முறையாக, ஒரு AI அமைப்பு ஆறு சிக்கலான கணக்குகளில் ஐந்தை வெற்றிகரமாக தீர்த்து, மனிதர்களுக்கு இணையான கணிதத் திறனை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த கணக்குகளில் இயற்கணிதம், கூட்டியல், வடிவியல் மற்றும் எண் கோட்பாடு ஆகியவை அடங்கும்.

சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் உள்ள கணக்குகள் மிகவும் கடினமானவை. இவற்றை தீர்க்க, கணிதத்தில் ஆழமான புரிதல் தேவை. இதுவரை AI அமைப்புகளால் இந்த அளவு திறனை அடைய முடியவில்லை.
ஆனால், கூகுளின் மேம்படுத்தப்பட்ட ஜெமினி டீப் திங்க் (Gemini Deep Think) என்ற AI மாதிரி தங்கப் பதக்க மதிப்பெண்ணை (42-ல் 35 புள்ளிகள்) பெற்று அசத்தியுள்ளது.
"கூகுள் டீப் திங்க் ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. அவற்றின் தீர்வுகள் தெளிவாகவும், துல்லியமாகவும் இருந்தன. மேலும், பெரும்பாலானவை எளிதாக புரிந்து கொள்ளக்கூடியவையாக இருந்தன" என்று சர்வதேச கணித ஒலிம்பியாட் தலைவர் டாக்டர் கிரெகோர் டோலினார் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு, டீப் திங்கின் ஆல்ஃபாப்ரூஃப் மற்றும் ஆல்ஃபாஜியோமெட்ரி (AlphaProof and AlphaGeometry) 2 அமைப்புகள் இணைந்து வெள்ளிப் பதக்க தரத்தை அடைந்தன.
ஆனால், அப்போது முடிவுகளை பெற இரண்டு முதல் மூன்று நாட்கள் தேவைப்பட்டன. இந்த ஆண்டு 4.5 மணி நேரத்தில் முடிவுகளை வழங்கியுள்ளது.