செய்திகள் :

மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு இல்லை: கனிமொழி கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்

post image

நமது நிருபர்

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசியல் இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று மக்களவையில் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக கனிமொழி, ஊராட்சிகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் போன்ற உள்ளூர் அமைப்புகளிலும், மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசியல் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதா? அப்படியிருந்தால் அதன் விவரங்கள் மற்றும் அவை செயல்படுத்தப்பட்ட ஆண்டு என்ன? நிர்வாகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதித்துவம் தொடர்ந்து குறைவாக இருப்பதால், நாடு முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசியல் இடஒதுக்கீட்டை வழங்குவதற்கு அரசு ஒரு தேசிய கொள்கையைக் கொண்டு வர அல்லது தொடர்புடைய சட்டங்களை திருத்த முன்மொழிந்துள்ளதா? என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இதற்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணை அமைச்சர் பி. எல். வர்மா மக்களவையில் செவ்வாய்க்கிழமை எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதில்: ஊராட்சிகள் மற்றும் நகராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகள் இந்திய அரசமைப்பின் ஏழாவது அட்டவணையில் உள்ள மாநிலப் பட்டியலில் 5-ஆவது பிரிவின்படி ஒரு மாநில விவகாரமாகும். பெண்கள், பட்டியல் ஜாதியினர் (எஸ்சி) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (எஸ்டி) ஆகியோருக்கான இடஒதுக்கீடுகளைப் போலல்லாமல், இந்திய அரசமைப்பின் கீழ் ஊராட்சிகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசியல் ரீதியாக இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016, மாற்றுத்திறனாளிகளுக்கு சமத்துவ மற்றும் பாகுபாடற்ற உரிமையை வழங்குகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகள் ஊராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கான தேர்தல்களில் போட்டியிடுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரூ.29 லட்சம் வரி! தெருவோர வியாபாரிகளுக்கு வந்த ஜிஎஸ்டி நோட்டீஸ்!

கர்நாடக மாநிலம் பெங்களூரில், சாலையோர காய்கறி மற்றும் பழ வியாபாரிகள் பலருக்கும் ஜிஎஸ்டி வரி செலுத்துமாறு வருமான வரிதுறையிடமிருந்த வந்திருக்கும் நோட்டீஸ் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.ஆண்டு மு... மேலும் பார்க்க

எலான் மஸ்க்கின் இரும்புக் குதிரை ‘டெஸ்லா மாடல் ஒய்’.! வாங்கலாமா? வேண்டாமா?!

அமெரிக்காவின் முன்னணி மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் முதல் விற்பனையகம் மும்பையில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) திறக்கப்பட்டது. டெஸ்லா மாடல் ஒய் காரின் சிறப்பம்சங்கள், விலை குறித்து இங்கு ப... மேலும் பார்க்க

பெண் கடத்தல் வழக்கில் கைதான பாஜக எம்பி மகன்.. அரசு உதவி தலைமை வழக்கறிஞராக நியமனம்!

ஹரியாணாவில் இளம்பெண்ணை கடத்த முயன்ற வழக்கில் கைதான பாஜக முன்னாள் தலைவரின் மகன், அரசு உதவி தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார்.சண்டீகரில் கடந்த 2017 ஆம் ஆண்டு முன்னாள் மூத்த ஐஏஎஸ் அதிகாரியின் மகள் ... மேலும் பார்க்க

நாடாளுமன்றம் 3-வது நாளாக முடங்கியது! எதிர்க்கட்சிகள் அமளியால் ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சியினர் அமளியால் மூன்றாவது நாளாக முடங்கியுள்ளது.மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் திங்கள்கிழமை காலை தொடங்கியது. பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம், ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் ராகுல் தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்!

பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் 2-வது நாளாக போராட்டம் நடத்தினர்.நிகழாண்டு நடைபெறும் பிகார் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, 22 ஆ... மேலும் பார்க்க

மோடியின் பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தத்தால் யாருக்கு சாதகம்?! கார்கள், விஸ்கி விலை குறையுமா?

பிரிட்டன், மாலத்தீவு ஆகிய இரு நாடுகளுக்கான 4 நாள்கள் அரசுமுறை சுற்றுப்பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (ஜூலை 23) தொடங்குகிறார். பிரிட்டனில் மேற்கொள்ளப்படும் முக்கிய வர்த்தக ஒப்பந்தங்களால் யாரு... மேலும் பார்க்க