செய்திகள் :

Jagdeep Dhankhar: வழக்கறிஞர் டு குடியரசு துணைத்தலைவர் - ஜெகதீப் தன்கரின் அரசியல் பயணம் ஓர் பார்வை!

post image

குடியரசுத் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று முன்தினம்  (ஜூலை 21) அறிவித்திருந்தார்.

உடல்நலக் காரணங்களைக் கருத்தில் கொண்டு மருத்துவ பரிசோதனைக்காக ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். அவரின் திடீர் ராஜினாமா எதிர்கட்சிகளிடையே ஒருவித சந்தேகத்தையும் கிளப்பி இருக்கிறது. திடீர் ராஜினாமா செய்த தன்கரின் பின்புலம் என்ன என்பதைப் பார்ப்போம்.  

ஜெகதீப் தன்கர்
ஜெகதீப் தன்கர்

ஜெகதீப் தன்கர் ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் 1951 ஆம் ஆண்டு கோகல் சந்த்-கேசரிதேவி தம்பதிக்கு மகனாக பிறந்தார்.

ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் சட்ட படிப்பை முடித்த தன்கர் நீண்ட காலமாக வழக்கறிஞராக பணிப்புரிந்து வந்தார்.

1990ஆம் ஆண்டில்தான் உயர்நீதிமன்ற வழக்கறிஞராகி இருக்கிறார். பின்பு அரசியலில் களமிறங்கி இருக்கிறார். ஜனதா தளம், இந்திய தேசிய காங்கிரஸ் அதைத் தொடர்ந்து பாஜகவிற்கு தாவிய தன்கர், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்திருக்கிறார். 

2008 சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜக பிரச்சாரக் குழு உறுப்பினராக இருந்த தன்கர், 2016 -ல் பாஜகவின் சட்ட விவகாரத் துறைக்குத் தலைமை தாங்கினார். அதைத் தொடர்ந்து கடந்த 2019-ல் மேற்குவங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

அப்போது, மாநில அரசுக்கும் தன்கருக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்தது. மேற்கு வங்க ஆளுநராக இருந்தபோதே, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

ஜெகதீப் தன்கர்
ஜெகதீப் தன்கர்

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், மொத்தம் 528 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று எதிர்க்கட்சி வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவை 346 வாக்குகள் வித்தியாசத்தில் தன்கர் தோற்கடித்தார்.

30 ஆண்டுகளில் ஒருவர் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பெற்ற அதிகபட்ச வெற்றி வாக்குகள் அதுவாகவே இருந்தது. குடியரசு துணைத் தலைவரான பிறகு சில விஷயங்களை வெளிப்படையாகப் பேசி இருக்கிறார். அது சர்ச்சையிலும் முடிந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

``அவர்களின் விளையாட்டைப் புரிந்து கொண்டோம்" -52 லட்ச வாக்காளர் பெயர் நீக்கம் குறித்து ராகுல் காந்தி

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. பீகாரில் நடந்துவரும் சிறப்பு வாக்காளர் பெயர் திருத்தப் பட்டியலுக்கு எதிர்க்கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதை எதிர்த்து எதிர்க்கட்சி எம்.பி.க்... மேலும் பார்க்க

Bihar SIR: 52 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டது ஏன்? - தேர்தல் ஆணையம் விளக்கம்

பீகார் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலை முன்னிட்டு பீகார் மாநிலத்தில் 'சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணி' மேற்கொள்ளப்படுகின்றது. ``தேர்தல் ஆ... மேலும் பார்க்க

Health: நாம் ஏன் உலர் பழங்களைச் சாப்பிட வேண்டும் தெரியுமா?

பழங்கள் சத்து நிறைந்தவை என்பது நமக்குத் தெரியும். அதேபோல் உலர் பழங்களிலும் ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன. ஸ்நாக்ஸ் நேரங்களில் இவற்றைச் சாப்பிடுவதால் எனர்ஜி கிடைக்கும். அந்தவகையில் நெல்லி, பேரீச்... மேலும் பார்க்க

Tanzania: 3,000 ஆண்டுகள் பழமையான மரங்கள் தன்சானியாவில் கண்டுபிடிப்பு.. ஆராய்ச்சியாளர்கள் வியப்பு!

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு, தான்சானியா. இங்கு, இதுவரை மனிதர்களால் பார்க்கப்படாத, சுமார் 3000 ஆண்டுகள் பழமையான மரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆய்வின் போது, இத்தாலிய... மேலும் பார்க்க

`5 லட்சம் மலர் செடிகள் பூத்து, கண்களுக்கு விருந்து படைக்கும்..' - சீசனுக்கு தயாராகும் ஊட்டி பூங்கா

ஊட்டியில் தேனிலவு சீசன் எனப்படும் இரண்டாம் கட்ட சீசன் ஆண்டுதோறும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கடைபிடிக்கப்படுகிறது. மே மாத கோடை சீசனுக்கு அடுத்தபடியாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் நடத்தப்படும்... மேலும் பார்க்க

புதுச்சேரி: `அரசு வேலை' ஆசை காட்டி மோசடி; சுருட்டிய பணத்தில் சமூக ஆர்வலராக வலம் வந்த பாஜக பிரமுகர்!

`மத்திய அமைச்சர் மூலமாகவே மூவ் செய்கிறோம்’புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் கிளை காரைக்கால் கோயில்பத்து பகுதியில் செயல்பட்டு வருகிறது. அங்கு கட்டி முடிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை இன்னும் சி... மேலும் பார்க்க