தாம்பரதத்தில் புதிய மாவட்ட தலைமை மருத்துவமனை: ஆக.5 -இல் முதல்வா் திறந்து வைக்கிற...
முக்கோண காதல் கதையில் இணையும் ரஞ்சனி தொடர் ஜோடி!
நடிகை ஹேமா பிந்து பிரதான பாத்திரத்தில் நடிக்கும் புதிய தொடர் குறித்த புதிய தகவல் தெரியவந்துள்ளது.
சின்ன திரையில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது முக்கோண காதல் கதைகள் நிறைய எடுக்கப்பட்டு வருகின்றன.
பூவே உனக்காக, கண்மணி அன்புடன், காத்து வாக்குல இரண்டு காதல், அன்னம் என சொல்லிக்கொண்டேப் போகலாம். தற்போது அதே பாணியில் புதிய தொடர் எடுக்கப்படுகிறது. இந்தப் புதிய தொடருக்கு இரு மலர்கள் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இரு மலர்கள் தொடரில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற 'இதயத்தை திருடாதே' தொடரில் நடித்து பிரபலமான நடிகை ஹிமா பிந்து பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார்.
சன் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள, இந்தத் தொடரில ஜீவிதா, சந்தோஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.
இவர்கள், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரஞ்சனி தொடரில் ஜோடியாக நடித்து பிரபலமான நிலையில், இரு மலர்கள் தொடரில் நடிக்கவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.
மேலும், இத்தொடரின் முன்னோட்ட விடியோ, ஒளிபரப்பு தேதி உள்ளிட்ட தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: அடுத்தடுத்து சின்ன திரையில் தோன்றும் சினிமா நடிகர்கள்!