செய்திகள் :

மகளிர் யூரோ அரையிறுதி: சர்ச்சையான பெனால்டியால் கண்ணீருடன் விடைபெற்ற இத்தாலி!

post image

யூரோ மகளிர் கால்பந்து அரையிறுதிப் போட்டியில் இத்தாலி கடைசி சில நிமிஷங்களில் தோல்வியுற்று வெளியேறினர்.

சுவிட்சா்லாந்தின் ஸ்டேட் டி ஜெனீவ் திடலில் யூரோ கோப்பை மகளிா் கால்பந்து அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இத்தாலியும் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியும் மோதின.

இந்தப் போட்டியில் 33-ஆவது நிமிஷத்தில் இத்தாலியின் பார்பரா பொனான்சே கோல் அடித்தார்.

இங்கிலாந்து எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. பின்னர், கடைசியாக 90+6 aஅவது நிமிடத்தில் கோல் அடித்து ஈடு செய்யவே போட்டி 1-1 என சமநிலையில் இருக்க, கூடுதல் நேரத்துக்குச் சென்றது.

119ஆவது நிமிஷத்தில் இங்கிலாந்து அணிக்கு பெனால்டி வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதில் கோல் அடிக்க அதை இத்தாலி அணியின் கோல்கீப்பர் தடுப்பார்.

அப்படி தடுக்கும்போது பந்து அவரது கையில் இல்லாமல் கீழே விழும். அப்படி விழுந்த கணத்தில் மீண்டும் இங்கிலாந்து வீராங்கனை ஸ்லோ கெல்லி பந்தினை வலைக்குள் லாவகமாக தள்ளினார்.

கூடிதல் நேரம் முடிந்து, ஸ்டாப்பாஜ் டைம் 3 நிமிடங்கள் ஒதுக்கியும் இத்தாலி அணியினால் கோல் அடிக்க முடியவில்லை.

முதல்முறையாக அரையிறிதிக்கு வந்து வரலாறு படைத்த அவர்கள் கண்ணீருடன் விடைபெற்றனர்.

இறுதிப் போட்டிக்கு முனேறியுள்ள நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை ஜெர்மனி அல்லது ஸ்பெயின் சந்திக்கும்.

இறுதிச்சுற்றில் திவ்யா

ஜாா்ஜியாவில் நடைபெறும் ஃபிடே மகளிா் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தினாா். அரையிறுதியில் சீனாவின் டான் ஜோங்யியுடன் மோதிய அவா், முதல் கேமை செவ்வ... மேலும் பார்க்க

இளமை தோற்றத்தில்... சூர்யா 46 - சிறப்பு போஸ்டர்!

நடிகர் சூர்யாவின் பிறந்த நாளையொட்டி ’சூர்யா 46’ படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.நடிகர் தனுஷின் வாத்தி, துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் ஆகிய வெற்றி திரைப்படங்களின் இயக்குநர் வெங்கி அட... மேலும் பார்க்க