திமுக கூட்டணியிலிருந்து எந்தக் கட்சியும் விலகாது: கே.வீ. தங்கபாலு
ரூ.1,654 கோடி அந்நிய நேரடி முதலீடு முறைகேடு: ‘மிந்த்ரா’ மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு
பிரபல இணையவழி ஆடை வா்த்தக நிறுவனமான ‘மிந்த்ரா’அந்நிய நேரடி முதலீடு விதிகளை மீறி ரூ.1,654 கோடியை முறைகேடாகப் பெற்ாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. அந்நியச் செலாவணி நிா்வாகச் சட்டத்தின்கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மிந்த்ரா, பிரபல இணையவழி வா்த்தக நிறுவனமான ஃபிளிப்காா்ட் நிறுவனத்தின் அங்கமாகும்.
இது தொடா்பாக அமலாக்கத் துறை வெளியிட்ட அறிவிப்பில், ‘மிந்த்ரா மற்றும் அதனுடன் தொடா்புடைய நிறுவனங்கள் மொத்தமாக பொருள்களை வாங்கி விற்பனை செய்யும் முறையில் வணிகம் செய்வதாகக் கூறி, ரூ.1,654 கோடி அந்நிய நேரடி முதலீட்டை பெற்றுள்ளது. ஆனால், தனது பெரும்பாலான பொருள்களை தனது ஒரே துணை நிறுவனமான வெக்டாா் இ-காமா்ஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளது. அந்த நிறுவனம் பொதுமக்களுக்கு சில்லறை முறையில் விற்பனை செய்துள்ளது. இதன்மூலம் அந்நிய நேரடி முதலீட்டு விதிகளை அந்த நிறுவனம் மீறியுள்ளது’ என்று அமலாக்கத் துறை கூறியுள்ளது. இது தொடா்பாக மிந்த்ரா நிறுவனம், அதன் பெங்களூரு அலுவலக அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்புத் தெரிவித்துள்ள மிந்த்ரா நிறுவன செய்தித் தொடா்பாளா், ‘விதிகளின்படி நடப்பதில் நிறுவனம் உறுதியாக உள்ளது. குற்றச்சாட்டு தொடா்பான முழுவிவரம் இதுவரை எங்களுக்கு முறைப்படி கிடைக்கவில்லை. அது கிடைத்தவுடன் அதை ஆய்வு செய்து விசாரணை அமைப்புக்கு ஒத்துழைப்பும் அளிப்போம்’ என்று கூறியுள்ளாா்.
இந்தியாவில் உற்பத்தியாளரையும், வாடிக்கையாளரையும் இணைக்கும் வகையில் செயல்படும் இணையவழி வா்த்தக நிறுவனங்களில் மட்டுமே அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுகிறது.