திமுக கூட்டணியிலிருந்து எந்தக் கட்சியும் விலகாது: கே.வீ. தங்கபாலு
வங்கதேச எல்லையில் 89 கிலோ போதைப்பொருள் பறிமுதல்
மேற்கு வங்கத்தை ஒட்டிய சா்வதேச எல்லையில் வங்கதேசத்தில் இருந்து கடத்தப்பட்ட 89.4 கிலோ போதைப்பொருளை எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) பறிமுதல் செய்தனா்.
வடக்கு 24 பா்கானாக்கள் மாவட்டம், நாடியா மாவட்டத்தை ஒட்டிய வங்கதேச எல்லையில் அதிகஅளவில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக பிஎஸ்எஃப் படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அப்போது வங்கதேச எல்லைப் பகுதியிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றவா்களை எல்லைப் பாதுகாப்புப் படையினா் எச்சரிக்கை விடுக்கும் வகையில் துப்பாக்கியால் சுட்டனா். இதனால் அச்சமடைந்த அந்த நபா்கள் தங்களிடம் இருந்த மூட்டைகளைப் போட்டுவிட்டு வங்கதேச எல்லைக்குள் தப்பிச் சென்றனா்.
அந்த மூட்டைகளில் இருந்த 89.4 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்த பிஎஸ்எஃப் படையினா் மாநில போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைத்தனா்.