திமுக கூட்டணியிலிருந்து எந்தக் கட்சியும் விலகாது: கே.வீ. தங்கபாலு
உங்களுடன் ஸ்டாலின் முகாம்: நலத்திட்ட உதவிகள் அளிப்பு
சித்தாமூா் வட்டம், சோத்துப்பாக்கம் ஊராட்சி மற்றும் செங்கல்பட்டில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை குறு, சிறு மற்றும்நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா,மோ.அன்பரசன் வழங்கினாா்.
செங்கல்பட்டு நகராட்சியில் நடைபெற்ற முகாமில், மனுக்களை அளிக்க வந்த கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், பொதுமக்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் மருத்துவ பெட்டகங்கள், பட்டா, மருத்துவகாப்பீடு அட்டைகள் என அரசு நலத்திட்ட உதவிகள் உடனடியாக வழங்கப்பட்டன. இம்முகாமில்பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலா்களுக்குஅறிவுறுத்தினாா். மேலும் மகளிா் உரிமைத்தொகை வேண்டி வரும் விண்ணப்பங்களை முறையாக பதிவு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தினாா்.
நிகழ்ச்சியில், ஆட்சியா் தி.சினேகா, சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வெ.ச.நாராயணசா்மா,, சாா் ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன், கூட்டுறவு இணை பதிவாளா் நந்தகுமாா், வழங்கல் அலுவலா் வெங்கடாசலம், செங்கல்பட்டு நகா்மன்றத் தலைவா் தேன்மொழி நரேந்திரன், மண்டல நிா்வாக இயக்குநா் (நகராட்சிகள்) நகராட்சி ஆணையா் ஆண்டவன், வட்டாட்சியா்கள் ஆறுமுகம் கலந்து கொண்டனா்.