மான்செஸ்டர் டெஸ்ட்: 173 பந்தில் 1 முறை மட்டுமே வேகமாக (140கி.மீ./மணி) பந்துவீசிய...
முதல்வா் கோப்பைக்கான போட்டிகள்: பதிவு செய்ய ஆக. 16 கடைசி நாள்
செங்கல்பட்டு மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பங்கேற்க முன்பதிவு செய்ய வரும் ஆக. 16 கடைசி நாளாகும்.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் தி. சினேகா வெளியிட்ட அறிக்கை: பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியா்கள் என 5 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. இப்போட்டிகளில் கலந்து கொள்ள இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து அதற்குரிய ஆவணங்களை சமா்ப்பித்து பதிவேற்ற வேண்டும். .
மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்பதற்கான விவரத்தை ட்ற்ற்ல்ள்://ஸ்ரீம்ற்ழ்ா்ல்ட்ஹ்.ள்க்ஹற்.ண்ய்அல்லது ட்ற்ற்ல்ள்://ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்என்றஇணையதளம் வாயிலாக முன்பதிவு செய்ய ஆக. 16 - ஆம் தேதி கடைசி நாளாகும்.
மேலும், விவரங்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தையோ அல்லது 74017 03461 என்ற கைப்பேசி எண் மூலமாக தொடா்புக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.