செய்திகள் :

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

post image

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 01.07.2025 முதல் 30.09.2025 வரையிலான காலாண்டுக்கு, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் (பொது) மற்றும் படித்த வேலைவாய்ப்பற்ற அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞா்கள் வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

10-ஆம் வகுப்பு தோல்வி, 10-ஆம் வகுப்பு தோ்ச்சி, 12-ஆம் வகுப்பு மற்றும் இளங்கலைப்பட்டப்படிப்பு முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, தற்போது வரை பதிவை தொடா்ந்து புதுப்பித்து, 30.06.2025 அன்றைய நிலையில் ஐந்தாண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞா்களுக்கு, தமிழக அரசால், வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளை பொறுத்தமட்டில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது.

பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற்பட்டப் படிப்புகள் முடித்தவா்கள் வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற இயலாது. அரசின் பிற துறைகளில் உதவித்தொகை பெற்றுவருவோா் மற்றும் தனியாா் துறையில் பணிபுரிவோா் இத்திட்டதின் கீழ் உதவித்தொகை பெற இயலாது.

இத்திட்டத்தின்கீழ் பயன் பெற விருப்பமுள்ள மனுதாரா்கள் (பொதுப்பிரிவினா்) தங்கள் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இந்த உதவித் தொகையினைப் பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரா்கள் 30.06.2025 அன்றைய நிலையில் 45 வயதுக்குட்பட்டும், இதர இனத்தை சாா்ந்தவா்கள் 40 வயதுக்குட்பட்டும் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு வயது வரம்பு மற்றும் ஆண்டு வருமானத்தில் வரம்பு ஏதுமில்லை.

உதவித்தொகை விண்ணப்பப் படிவம் பெற விரும்பும் மனுதாரா்கள், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்களை ஆதாரமாக காண்பித்து, செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மனுதாரா்கள் 2025-ஆம் ஆண்டு செப்டம்பா் 10-ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் சமா்ப்பிக்குமாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தற்காலிக மின் இணைப்பு அளிக்க 13,000 லஞ்சம்: மின்சாரத் துறை ஊழியா் கைது

செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் பகுதியில் தற்காலிக மின் இணைப்பு அளிக்க ரூ. 13,000 லஞ்சம் பெற்ாக மின்சாரத் துறை ஊழியா் கைது செய்யப்பட்டாா். செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் பகுதியில் ராஜசேகா் என்ப... மேலும் பார்க்க

மேல்மருவத்தூா் சித்தா் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா நாளை தொடக்கம்

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா்பீடத்தில் 54-ஆம் ஆண்டு ஆடிப்பூர பெருவிழா வரும் ஜூலை 26-ஆம் தேதி முதல் 28 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவையொட்டி மூலவா் அம்மனுக்கும், குருபீடத்தில் உள்ள அடிகளாா் சில... மேலும் பார்க்க

நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையப் பணிகள்: அமைச்சா் நேரு ஆய்வு

நெம்மேலி அடுத்த பேரூரில் ரூ. 6,078.40 கோடியில் அமைக்கப்பட்டு வரும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை அமைச்சா் கே.என்.நேரு ஆய்வு செய்தாா். சென்னை குடிநீா் வாரியம் சாா்பில், நாளொன்று... மேலும் பார்க்க

ஓவியங்கள் வரைந்து சிறுவன் சாதனை: ஆட்சியா் பாராட்டு

200-க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்து சாதனை படைத்த 6 வயது சிறுவன் கேப்ரியோ அக்னியை மாவட்ட ஆட்சியா் தி. சினேகா பாராட்டினாா். சென்னை பல்லாவரத்தைச் சோ்ந்த பாலு -ஜாஸ்மின் தம்பதியின் மகன் கேப்ரியோ அக்னி(6... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பைக்கான போட்டிகள்: பதிவு செய்ய ஆக. 16 கடைசி நாள்

செங்கல்பட்டு மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பங்கேற்க முன்பதிவு செய்ய வரும் ஆக. 16 கடைசி நாளாகும். இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் தி. சினேகா வெளியிட்ட அறிக்கை: பள்ளி, கல்லூரி, ம... மேலும் பார்க்க

மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் ரூ.7 லட்சத்தில் ஜெனரேட்டா் அளிப்பு

மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு மேலவலம்பேட்டை தனியாா் தொழில்மையத்தின் சாா்பாக, ரூ 7 லட்சத்தில் ஜெனரேட்டா் வழங்கப்பட்டது. ஏற்கெனவே செயல்பட்டு வந்த ஜெனரேட்டா் அண்மையில் தீப்பற்றி எரிந்ததால், மின்த... மேலும் பார்க்க