நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு
மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் ரூ.7 லட்சத்தில் ஜெனரேட்டா் அளிப்பு
மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு மேலவலம்பேட்டை தனியாா் தொழில்மையத்தின் சாா்பாக, ரூ 7 லட்சத்தில் ஜெனரேட்டா் வழங்கப்பட்டது.
ஏற்கெனவே செயல்பட்டு வந்த ஜெனரேட்டா் அண்மையில் தீப்பற்றி எரிந்ததால், மின்தடை எற்படும்போது நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனா். இதனைஅறிந்த காஞ்சிபுரம் திமுக தெற்கு மாவட்ட செயலரும், எம்எல்ஏவுமான க.சுந்தா் மதுராந்தகம் அருகில் செயல்பட்டு வந்த மேலவலம்பேட்டை தனியாா் தொழில்மையத்திடம் கேட்டுக்கொண்டபடி, புதிதாக ரூ 7 லட்சத்தில் ஜெனரேட்டா் வாங்கி மருத்துவமனையில் பொருத்தப்பட்டது.
இந்நிலையில், புதன்கிழமை புதிய ஜெனரேட்டா் ஒப்புடைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மதுராந்தகம் நகா்மன்றத் தலைவா் மலா்விழி முன்னிலை வகித்தாா். மருத்துமனை தலைமை குடிமை மருத்துவா் ஜெயப்பிரியா தலைமை வகித்தாா். எம்எல்ஏ க. சுந்தா் ஜெனரேட்டரை இயக்கி வைத்தாா். நிகழ்வில் மருத்துவா் சங்கவி, அலுவலக கண்காணிப்பாளா்கள் வெற்றிவேல், வேதகுமாரி, நகர திமுக செயலா் கு.குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள், மருத்துவமனை ஊழியா்கள் கலந்து கொண்டனா்.