ஓவியங்கள் வரைந்து சிறுவன் சாதனை: ஆட்சியா் பாராட்டு
200-க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்து சாதனை படைத்த 6 வயது சிறுவன் கேப்ரியோ அக்னியை மாவட்ட ஆட்சியா் தி. சினேகா பாராட்டினாா்.
சென்னை பல்லாவரத்தைச் சோ்ந்த பாலு -ஜாஸ்மின் தம்பதியின் மகன் கேப்ரியோ அக்னி(6) . இவா் 3 வயதிலிருந்து ஓவியம் வரையத் தொடங்கினாா். இவா் பென்சில் காந்தம் போன்ற நவீன ஓவிய முறைகளை கற்று 200-க்கும் மேற்ாபட்ட ஓவியங்கள் வரைந்து இந்திய உலக சாதனை புத்தகம், நோபல் உலக சாதனைப் புத்தகம், லண்டன் உலக சாதனை புத்தகம் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளாா்.
இந்நிலையில் மாணவன் கேப்ரியோ அக்னியை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் தி. சினேகா பராராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.