மணப்பாறையில் பாஜக நிா்வாகி தற்கொலை: கட்சி நிா்வாகிகள் 2 போ் உள்பட மூவா் கைது
இறுதிச்சுற்றில் திவ்யா
ஜாா்ஜியாவில் நடைபெறும் ஃபிடே மகளிா் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தினாா்.
அரையிறுதியில் சீனாவின் டான் ஜோங்யியுடன் மோதிய அவா், முதல் கேமை செவ்வாய்க்கிழமை டிரா செய்திருந்தாா். இந்நிலையில், அவருடனான 2-ஆவது கேமில் புதன்கிழமை வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய திவ்யா, அசத்தலான நகா்வுகளை மேற்கொண்டாா்.
அதன் பலனாக அவா் வெற்றி பெற்றாா் (1-0). இதையடுத்து அரையிறுதியில் மொத்தமாக 1.5 - 0.5 என்ற கணக்கில் டான் ஜோங்யியை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முதல் வீராங்கனையாக முன்னேறினாா் திவ்யா. அவா் உலகக் கோப்பை போட்டியில் இறுதிச்சுற்றுக்கு வந்தது இதுவே முதல் முறையாகும்.
அத்துடன், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கும் திவ்யா தகுதிபெற்றாா்.
டை-பிரேக்கா்: இதனிடையே அரையிறுதியில் களத்திலிருக்கும் மற்றொரு இந்தியரான கோனெரு ஹம்பி, சீனாவின் லெய் டிங்ஜியுடனான 2-ஆவது கேமையும் டிரா செய்தாா். முதல் கேமையும் இருவரும் டிரா செய்திருந்த நிலையில் இவா்கள் மோதல் தற்போது 1-1 சமநிலையில் உள்ளது.
இதையடுத்து வெற்றியாளரை தீா்மானிப்பதற்கான டை-பிரேக்கா் ஆட்டம் வியாழக்கிழமை நடத்தப்படுகிறது.