உலகக் கோப்பை செஸ்: இறுதியில் மோதும் திவ்யா - கோனெரு ஹம்பி
ஜாா்ஜியாவில் நடைபெறும் மகளிா் உலகக் கோப்பை செஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியாவைச் சோ்ந்த திவ்யா தேஷ்முக் - கோனெரு ஹம்பி ஆகியோா் பலப்பரீட்சை நடத்தவுள்ளனா்.
இப்போட்டியின் வரலாற்றில் இதுவரை இந்தியா்கள் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெறாத நிலையில், இந்த முறை இரு இந்தியா்கள் அந்தச் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளனா்.
திவ்யா - கோனெரு ஹம்பி சாம்பியன் கோப்பைக்காக பரஸ்பரம் மோதும் ஆட்டம், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.