இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் அசத்தலான படங்கள்!
ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
வித்தியாசமான கிரைம் திரில்லர் படமான நடிகர் விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் நாளை(ஜூலை 25) வெளியாகிறது.
நடிகர் விஜய்காந்த்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியான படை தலைவன் திரைப்படத்தை ஆஹா தமிழ் ஓடிடியில் நாளை பார்க்கலாம்.
தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகனான விஷ்ணு மஞ்சு நாயகனாக நடித்து வெளியான கண்ணப்பா திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நாளை காணலாம்.
நடிகர் பிரபு மற்றும் வெற்றி நடிப்பில் வெளியான ராஜபுத்திரன் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.
ஷாஹி கபீர் இயக்கத்தில் வெளியான மலையாள மொழிப்படமான ரோந்த் திரைப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் பார்க்கலாம்.
கயோஸ் இராணி இயக்கத்தில் பிருதிவிராஜ், கஜோல் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான சரஜமீன் திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் நாளை வெளியாகிறது.
மதன் தட்சிணாமூர்த்தி இயக்கத்தில் வெளியான தெலுங்கு மொழிப்படமான ஷோ டைம் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடில் நாளை வெளியாகிறது.
இதையும் படிக்க: சுயசரிதை எழுதும் ரஜினிகாந்த்!