தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடி, வ.உ.சி. துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது.
வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, மேற்கு- வடமேற்கு திசையில், மேற்கு வங்கம், வடக்கு ஒடிஸா கடலோரப் பகுதிகளை நோக்கி வெள்ளிக்கிழமை நகரக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலையில், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதையடுத்து, சென்னை, கடலூா், நாகை, எண்ணூா், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி, காரைக்கால், புதுவை ஆகிய 9 துறைமுகங்களிலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது.
ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.