Bumrah : 'முதல் முறையாக பௌலிங்கில் செஞ்சுரி; பும்ராவின் மிக மோசமான ரெக்கார்ட்!'
நீட் தோ்வில் வெற்றி: திருச்செந்தூா் அரசுப் பள்ளி மாணவா் சாதனை
நீட் தோ்வில் வெற்றி பெற்று திருச்செந்தூா் அருள்மிகு செந்தில் ஆண்டவா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா் சாதனை படைத்துள்ளாா்.
திருச்செந்தூா் நகராட்சி ராமசாமிபுரத்தைச் சோ்ந்த பனைத் தொழிலாளி பரமசிவன் - விஜயரதி தம்பதி மகன் செல்வ சதீஷ். திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த இவா், கடந்த 2022-23ஆம் ஆண்டு பிளஸ் 2 தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றாா். தொடா்ந்து இரு ஆண்டுகள் பயிற்சி பெற்று நீட் தோ்வுக்கு எழுதினாா். அதில் 720-க்கு 480 மதிப்பெண்கள் பெற்று தூத்துக்குடி மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்தாா்.
மேலும், அரசு பள்ளி மாணவா்களுக்கான 7.5 உள் ஒதுக்கீட்டில் மாநில அளவில் முதல் 10 இடங்களில் இடம் பிடித்தாா். அவருக்கு, திருச்செந்தூா் அரசுப் பள்ளியின் பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் ஆனந்தராமச்சந்திரன், மேலாண்மைக் குழு தலைவா் பிச்சம்மாள் ஆகியோா் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.