மது போதையில் நண்பர்களிடையே மோதல்: எழும்பூரில் படுகாயமடைந்த எஸ்ஐ உயிரிழப்பு!
பிறந்த நாள் கொண்டாடிய பிரதீப் ரங்கநாதன்: டூட் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிப்பு!
நடிகர் பிரதீப் ரங்கநாதன் பிறந்த நாள் கொண்டாட்டம் புகைப்படங்களை டூட் படக்குழு பகிர்ந்துள்ளது.
அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கிவரும் டூட் படத்தில் நாயகனாக நடிகர் பிரதீப் ரங்கநாதனும் நாயகியாக மமிதா பைஜூவும் நடிக்கின்றனர்.
இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கும் இந்தப் படத்தில் சரத் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மைத்ரி மூவிஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.
இயக்குநரான பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படத்தில் நாயகனாகவும் வென்றதால் அடுத்தடுத்த அதே பாணியில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இன்று பிரதீப் ரங்கநாதன் பிறந்த நாளை படக்குழு கொண்டாடியுள்ளது. அதன் புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்தக் கொண்டாட்டத்தில் நடிகை மமிதா பைஜூ உள்பட நடிகர் நடிகைகள் பங்கேற்றுள்ளனர்.
தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட இந்தப் பதிவில் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Special celebrations for the sensational talent
— Mythri Movie Makers (@MythriOfficial) July 25, 2025
Team #DUDE celebrated the birthday of @pradeeponelife on sets #Dude in cinemas this Diwali ✨
⭐ing 'The Sensational' @pradeeponelife
Written and directed by @Keerthiswaran_
A @SaiAbhyankkar musical
Produced by… pic.twitter.com/NkenTmFmgN