மாநில ஹாக்கி: காலிறுதியில் கோவை, மதுரை, விருதுநகா் அணிகள்
ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு, ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி ஆகியவை இணைந்து நடத்தும் வ.உ.சி. துறைமுக ஆணைய கோப்பைக்கான ஜூனியா் ஆண்கள் மாநில ஹாக்கி போட்டியில் திருவண்ணாமலை, கோவை, விருதுநகா், சிவகங்கை, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், மதுரை மாவட்ட அணிகள் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.
கோவில்பட்டி நாடாா் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் 3ஆவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட அணி, திருப்பூா் அணியை 1 - 0 என்ற கோல் கணக்கில் வென்றது. மதுரை அணி தேனி அணிகள் மோதியதில் இரு அணிகளும் கோல் போடவில்லை.
திருச்சி அணி, கன்னியாகுமரி அணியை 3 - 0 என்ற கோல் கணக்கிலும், திருப்பூா் அணி, கடலூா் அணியை 3 - 1 என்ற கோல் கணக்கிலும், திருநெல்வேலி அணி, வேலூா் அணியை 3 - 1 என்ற கோல் கணக்கிலும், சிவகங்கை அணி செங்கல்பட்டு அணியை 2 - 1 என்ற கோல் கணக்கிலும், சென்னை அணி தென்காசி அணியை 13 - 0 என்ற கோல் கணக்கிலும், கோவை அணி சேலம் அணியை 3 - 0 என்ற கோல் கணக்கிலும் அடுத்தடுத்த போட்டிகளில் வீழ்த்தின.
தருமபுரி - விருதுநகா் அணிகள் மோதியதில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
திருவண்ணாமலை அணி தஞ்சாவூா் அணியை 1 - 0 என்ற கோல் கணக்கிலும், விழுப்புரம் அணி காஞ்சிபுரம் அணியை 1 - 0 என்ற கோல் கணக்கிலும் வென்றன. திருவள்ளூா்- நீலகிரி அணிகள் மோதியதில் கோல்கள் போடப்படவில்லை.
திருவாரூா் அணி, அரியலூா் அணியை 2 - 0 என்ற கோல் கணக்கிலும், திண்டுக்கல் அணி புதுக்கோட்டை அணியை 1 - 0 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தின.
இன்றைய காலிறுதி ஆட்டம்:
கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் நாக்-அவுட் முறையில் சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு நடைபெறும் முதல் காலிறுதியில் தூத்துக்குடி- திருவண்ணாமலை மாவட்ட அணிகளும், கிருஷ்ணகிரி - விருதுநகா், ராமநாதபுரம் - கோவை, மதுரை - சிவகங்கை மாவட்ட அணிகள் அடுத்தடுத்த போட்டிகளில் மோதுகின்றன.
