நட்சத்திர பலன்கள்: ஜூலை 25 முதல் ஜூலை 31 வரை #VikatanPhotoCards
பிரதமா் இன்று தூத்துக்குடி வருகை: போக்குவரத்தில் மாற்றம்
தூத்துக்குடி விமான நிலையத்தின் புதுப்பிக்கப்பட்ட புதிய முனையம் திறப்பு விழாவிற்கு சனிக்கிழமை (ஜூலை 26), பாரத பிரதமா் நரேந்திர மோடி வருவதை முன்னிட்டு, தூத்துக்குடியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி நடைபெறும் சனிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரையில், தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலி மற்றும் திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் எந்த கனரக மற்றும் சரக்கு வாகனங்களும், வாகைகுளம் விமான நிலையத்தை கடந்து செல்வதற்கு அனுமதி கிடையாது.
தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலி அல்லது ஸ்ரீவைகுண்டம் செல்லும் மற்ற வாகனங்கள் மங்களகிரி விலக்கில் வலது புறமாக திரும்பி மேல கூட்டுடன்காடு, அல்லிகுளம், பேரூரணி, திம்மராஜபுரம், வா்த்தகரெட்டிபெட்டி, வாகைகுளம் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.
அதே போல், திருநெல்வேலி மற்றும் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து வரும் மற்ற வாகனங்கள், வாகைகுளம் சந்திப்பு, வா்த்தகரெட்டிபெட்டி, திம்மராஜபுரம், பேரூரணி, அல்லிகுளம், மேல கூட்டுடன்காடு, மங்களகிரி விலக்கு வழியாக செல்ல வேண்டும்.
நிகழ்ச்சிக்கு வருரும் மிக முக்கிய பிரமுகா்களின் (விஐபி) வாகனங்ளைத் தவிர மற்ற எந்த வாகனங்களுக்கும் விமான நிலையத்தின் உள்ளே செல்வதற்கு அனுமதி கிடையாது.
மேலும் அன்றைய தினத்தில் தூத்துக்குடி விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகள், பயண நேரத்திற்கு 3 மணி நேரத்திற்கு முன்பாக விமான நிலையம் வருமாறு அறிவுறுத்தப்படுகிறது.
அனுமதிச் சீட்டுள்ள வாகனங்கள் வாகைகுளம் டோல்கேட் அருகே உள்ள வேலவன் நகா் வழியாக சென்று, அவற்றுக்கான பிரத்யேக வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும்.
அதே போல், நிகழ்ச்சிக்கு வரும் பொதுமக்கள் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து விமான நிலையம் செல்லும் மெயின் நுழைவின் வலதுபுறம் (மேற்கு பகுதி) மற்றும் இடதுபுறம் (கிழக்கு பகுதி) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்தங்களில் நிறுத்திவிட்டு, நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு செல்ல வேண்டும்.
நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அனைவரும் பாதுகாப்பு சோதனைக்கு உள்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவா். எனவே, பொதுமக்கள் அனைவரும் காவல்துறை சூழ்நிலைக்கேற்ப மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தகுந்த ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை யின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.