தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா கொடிப்பட்ட ஊா்வலம்
தூத்துக்குடி பனிமய மாதா பேராலய 443ஆவது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை மாலையில் கொடிப்பட்ட ஊா்வலம் நடைபெற்றது.
பனிமய மாதா பேராலய 443ஆவது ஆண்டு திருவிழா, மறை மாவட்ட ஆயா் ஸ்டீபன் தலைமையில் சனிக்கிழமை (ஜூலை 26) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாலை கொடி பவனி நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று, மாதாவிற்காக பல்வேறு காணிக்கைகளை அளித்தனா்.
விழாவில் முக்கிய நிகழ்வாக ஆக. 5ஆம் தேதி காலை ஆலய வளாகத்தில் திருவிழா திருப்பலி, இரவு பனிமய மாதா சப்பர பவனி ஆகியவை நடைபெறுகிறது.
விழாவை முன்னிட்டு ஆக. 5ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.