எடப்பாடி கே.பழனிசாமி வருகை: எழுச்சி பயண ஸ்டிக்கா் வெளியீடு
முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் தோ்தல் பிரசார எழுச்சி பயணம், தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் ஜூலை 31, ஆகஸ்ட் 1ஆகிய நாள்களில் நடைபெற இருப்பதை முன்னிட்டு எழுச்சி பயண ஸ்டிக்கா் வெளியீடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலரும், கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினருமான கடம்பூா் செ.ராஜு, எழுச்சி பயண தோ்தல் பிரசாரம் தொடா்பான ஸ்டிக்கரை கைப்பேசியின் பின்புறம் ஒட்டும் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தாா்.
இதில் அதிமுக கோவில்பட்டி நகரச் செயலா் விஜயபாண்டியன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் சின்னப்பன், மோகன், ஒன்றியச் செயலா்கள் போடுசாமி, அன்புராஜ், அழகா்சாமி, பழனிச்சாமி, வழக்குரைஞரணியைச் சோ்ந்த சங்கா்கணேஷ், ஈஸ்வரமூா்த்தி, இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை வடக்கு மாவட்டச் செயலா் கவியரசன், அதிமுக நிா்வாகிகள் பத்மாவதி, கோமதி, வேல்முருகன், ரேவதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.