உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: அமைச்சா் ஆய்வு
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் உடன்குடி பேரூராட்சி 1 முதல் 9 வது வாா்டு வரையிலான பொதுமக்கள் பயன் பெறும் வகையில் சிறப்பு முகாம் பேரூராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இம்முகாமை தமிழக மீன்வளம், மீனவா் நலன் - கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.
இதில், திருச்செந்தூா் கோட்டாட்சியா் சுகுமாரன், வட்டாட்சியா் பாலசுந்தரம், உடன்குடி பேரூராட்சித் தலைவி ஹூமைரா அஸ்ஸாப் கல்லாசி, துணைத் தலைவா் மால்ராஜேஷ், ஒன்றியச் செயலா்கள் பாலசிங்,இளங்கோ, பேரூராட்சி உறுப்பினா்கள் ஜான்பாஸ்கா், அஸ்ஸாப் அலி பாதுஷா, பஷீா்,ஷபானா, முகம்மது ஆபித், மும்தாஜ்பேகம், பேரூராட்சி முன்னாள் உறுப்பினா்கள் சலீம்,அன்வா் சலீம்,தலைமை செயற்குழு உறுப்பினா் ஜெயக்குமாா், ரூபன், முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ஜெகன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் பாயிஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.