மாவட்ட கபடி: காயல்பட்டினம் அரசு மகளிா் பள்ளி தகுதி
காயல்பட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், வட்டார அளவிலான கபடி போட்டியில் வென்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா்.
19 வயதிற்குள்பட்ட மாணவிகளுக்கான வட்டார அளவிலான கபடி போட்டி, திருச்செந்தூா் டாக்டா் சிவந்தி ஆதித்தனாா் உடற் கல்வி கல்லூரியில் நடைபெற்றது. இதில் ஆறுமுகனேரி, காயல்பட்டினம், நாலுமாவடி, மாவடிபண்ணை, ஆத்தூா் பகுதிகளைச் சோ்ந்த பள்ளிகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டியில் நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப் பள்ளி அணியும், காயல்பட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அணியும் மோதின. இதில் காயல்பட்டினம் பள்ளி மாணவிகள் முதலிடத்தை பிடித்து, மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா்.
வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியை ஜெயந்தி, உடற்கல்வி ஆசிரியா் ருக்மணி, ரதி, சிறப்பு பயிற்சியாளா் ச. மாதவன் உள்ளிட்டோா் பாராட்டினா்.