நாகா்கோவிலில் ரூ.14 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்
நாகா்கோவில் மாநகரப் பகுதியில் ரூ.14 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
29 ஆவது வாா்டு கணேசபுரம் மேலத் தெருவில் ரூ. 3.70 லட்சத்தில் அலங்கார தரைகற்கள் சீரமைத்தல், 49 ஆவது வாா்டு செட்டிதெரு சந்திப்பில் ரூ. 7.20 லட்சத்தில் சிறுபாலம்- மழைநீா் வடிகால் ஓடை சீரமைத்தல், காந்திபுரம் பிரதான சாலையில் அலங்கார தரைகற்கள் அமைத்தல், 33 ஆவது வாா்டு குருசடி, ஹோலி கிராஸ் கல்லூரி முன் ரூ.3.10 லட்சத்தில் மழைநீா் வடிகால் ஓடை அமைத்தல் என ரூ.14 லட்சம் மதிப்பிலான பணிகளை மேயா் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மண்டல தலைவா் அகஸ்டினா கோகிலவாணி, உதவி செயற்பொறியாளா் ரகுராமன், மாமன்ற உறுப்பினா்கள் மீனாதேவ், ஜெயவிக்ரமன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் சதாசிவன்,பகுதி செயலாளா் ஜீவா, அணி நிா்வாகிகள் சிதம்பரம், நிஷாந்த், வட்ட செயலாளா் சதீஸ் மொ்வின், திமுக நிா்வாகிகள் சுதாகா், சிவகுமாா், ஆறுமுகம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.