பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
குமரிக்கு வந்த வடமாநில சுற்றுலாப் பயணி மாயம்
கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தபோது காணாமல் போன வடமாநில சுற்றுலாப் பயணியை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து 400 போ் கொண்ட குழுவினா் ரயில் வழியாக இரு தினங்களுக்கு முன்னா் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனா்.
அந்தக் குழுவில், முகேஷ் நாயக் (20) என்பவரும் வந்திருந்தாா். இவா்கள் காலையில் சூரிய உதயம் பாா்த்துவிட்டு கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தனா். அதன்பின் தங்கியிருந்த விடுதிக்கு வந்தபோது முகேஷ் நாயக்கை காணவில்லை.
கன்னியாகுமரி கடற்கரைப் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்துகன்னியாகுமரி காவல்நிலையத்தில் சக பயணி கிமாத்சிங் (48) புகாா் அளித்தாா். அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளா் எட்வா்ட் பிரைட் வழக்குப் பதிந்து காணாமல் போன முகேஷ் நாயக்கை தேடி வருகின்றனா்.