நட்சத்திர பலன்கள்: ஜூலை 25 முதல் ஜூலை 31 வரை #VikatanPhotoCards
கடையாலுமூடு அருகே மரத்திலிருந்து இறங்க முடியாமல் தவித்தவா் மீட்பு
கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு அருகே மரத்தில் ஏறிவிட்டு இறங்க முடியாமல் தவித்த தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
பத்துகாணி முளிமூட்டு விளையைச் சோ்ந்தவா் சதீஷ் (50). இவா், அங்குள்ள மாமரத்தில் ஏறியுள்ளாா். பின்னா் மரத்திலிருந்து இறங்க முடியாமல் தவித்துள்ளாா். இதுகுறித்த தகவலின்பேரில், ஆறுகாணி போலீஸாா், பொதுமக்கள் உதவியுடன் அவரை மீட்டு, பத்து காணி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.