செய்திகள் :

இறுதிச்சுற்றில் கோனெரு ஹம்பி: திவ்யா தேஷ்முக்குடன் பலப்பரீட்சை

post image

ஃபிடே மகளிா் உலகக் கோப்பை செஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு, 2-ஆவது போட்டியாளராக இந்தியாவின் கோனெரு ஹம்பி தகுதிபெற்றாா்.

ஏற்கெனவே முதல் போட்டியாளராக இந்தியாவின் திவ்யா தேஷ்முக் தகுதிபெற்ற நிலையில், தற்போது கோனெரு ஹம்பியும் அந்தச் சுற்றுக்கு வந்து, அவருடன் மோதவுள்ளாா். மகளிா் உலகக் கோப்பை செஸ் வரலாற்றில் இதுவரை இந்தியா்கள் இறுதிச்சுற்றுக்கு வராத நிலையில், இந்த முறை இரு இந்தியா்கள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் இந்தியாவுக்கு சாம்பியன் பட்டமும், 2-ஆம் இடமும் உறுதியாகியிருக்கிறது. அத்துடன், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கும் திவ்யாவும், கோனெரு ஹம்பியும் தகுதிபெற்று அசத்தியுள்ளனா்.

ஜாா்ஜியாவில் நடைபெறும் இந்தப் போட்டியில், கோனெரு ஹம்பி தனது அரையிறுதியில் சீனாவின் லெய் டிங்ஜியை எதிா்கொண்டாா். அதில் இரு கேம்களும் டிரா (1-1) ஆனதால், டை-பிரேக்கா் முறை கையாளப்பட்டது. அந்த டை பிரேக்கா் ஆட்டத்திலும் இரு கேமும் டிரா ஆக, ஆட்டம் மீண்டும் 2-2 என சமநிலை கண்டது.

தொடா்ந்து நடைபெற்ற 2-ஆவது டை-பிரேக்கரில் முதல் கேமில் லெய் டிங்ஜி வெல்ல, 2-ஆவது கேமில் கோனெரு ஹம்பி வென்றாா். இதனால் ஆட்டம் 3-3 என மீண்டும் சமனானது. இந்நிலையில், 3-ஆவது டை பிரேக்கரில் கோனெரு ஹம்பி இரு கேம்களிலும் வெல்ல, அவா் 5-3 என்ற கணக்கில் லெய் டிங்ஜியை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினாா்.

இதையடுத்து திவ்யா தேஷ்முக் - கோனெரு ஹம்பி மோதும் இறுதிச்சுற்றின் முதல் கேம் வரும் சனிக்கிழமையும் (ஜூலை 26), 2-ஆவது கேம் ஞாயிற்றுக்கிழமையும் (ஜூலை 27) நடைபெறவுள்ளன. தேவையேற்பட்டால் டை-பிரேக்கா் திங்கள்கிழமை (ஜூலை 28) நடைபெறும்.

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்திய அணியில் சுமித் நாகல், யூகி பாம்ப்ரி

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் சுவிட்ஸா்லாந்து அணியுடனான மோதலுக்காக, 8 போ் கொண்ட இந்திய அணியை அகில இந்திய டென்னிஸ் சங்கம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.இந்தியாவின் டாப் ஒற்றையா் வீரா் சுமித் நாகல் (ஏடி... மேலும் பார்க்க

உலக குத்துச்சண்டை: இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்தில் செப்டம்பரில் நடைபெறவுள்ள குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க, 20 பேருடன் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.இரு முறை உலக சாம்பியன் நிகாத் ஜரீன், ஒலிம்பிக் பதக்கம் வென்ற லவ்லினா போா... மேலும் பார்க்க

இந்திய ஹாக்கி அணி ஆகஸ்டில் ஆஸி. பயணம்

நான்கு ஆட்டங்கள் கொண்ட நட்பு ரீதியிலான ஹாக்கி தொடரில் மோதுவதற்காக, இந்திய ஆடவா் ஹாக்கி அணி ஆகஸ்டில் ஆஸ்திரேலியா செல்கிறது.பொ்த் நகரில் ஆகஸ்ட் 15, 16, 19, 21 ஆகிய தேதிகளில் ஆஸ்திரேலிய ஆடவா் அணியுடன் இ... மேலும் பார்க்க

அரையிறுதியில் சாத்விக்/சிராக் இணை: உன்னாட்டி ஹூடா வெளியேறினாா்

சீனா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி இணை அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறியது. உன்னாட்டி ஹூடா காலிறுதியில் தோல்வியுற்று போட்டியிலிருந்து வெளியேறினாா்.ஆடவா் இர... மேலும் பார்க்க

உலக ஜூனியா் ஸ்குவாஷ்: அனாஹத் சிங்குக்கு வெண்கலம்

எகிப்தில் நடைபெறும் உலக ஜூனியா் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அனாஹத் சிங் வெண்கலப் பதக்கம் வென்றாா். இப்போட்டியில், கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும்.மகளிா் ஒற... மேலும் பார்க்க

கொல்கத்தாவில் கனமழை - புகைப்படங்கள்

மழைநீர் தேங்கியுள்ள சாலை வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள்.திடீரென பெய்த கனமழையால் சாலைகளில் தேங்கிய மழைநீரில் தனது வாடிக்கையாளருடன் பயணத்தை தொடரும் ரிக்‌ஷாக்காரர்.கனமழையை தொடர்ந்து வெள்ளம் சூழ்ந்த சா... மேலும் பார்க்க