திமுக கூட்டணியிலிருந்து எந்தக் கட்சியும் விலகாது: கே.வீ. தங்கபாலு
எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணத்தில் மாற்றம்
அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் தொடா் பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தொடா் சுற்றுப்பயணத்தை கடந்த ஜூலை 7-ஆம் தேதி முதல் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக எடப்பாடி கே.பழனிசாமி மேற்கொண்டு வருகிறாா். ஆக. 8-ஆம் தேதி வரை அவரது சுற்றுப்பயண விவரம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஜூலை 26-ஆம் அவா் மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டு, ஜூலை 29-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 29-இல் சிவகங்கை மாவட்டத்துக்குள்பட்ட காரைக்குடி, திருப்பத்தூா், சிவகங்கை ஆகிய தொகுதிகளில் அவா் சுற்றுப்பயணம் மேற்கொள்வாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.