ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் பரிசோதனை திட்டம் தொடக்கம்
சின்ன திரைக்கு வருகிறார் காதல் சந்தியா! எந்தத் தொடர் தெரியுமா?
காதல் திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்ற நடிகை சந்தியா, சின்ன திரை தொடரில் நடிக்கவுள்ளார்.
சினிமாவில் நடித்த பல பிரபலங்கள் சின்ன திரைகளில் தோன்றுவது வழக்கமானது. சினிமாவில் நாயகிகளாக நடித்தவர்கள் பெரும்பாலும் முதன்மை பாத்திரங்களிலேயே தொடர்களில் தோன்றுவார்கள். ஆனால், சினிமாவில் நாயகிகளாக நடித்தவர்கள் ஏற்கெனவே ஒளிபரப்பாகிவரும் தொடரில் சிறிய பாத்திரத்தில் தோன்றுவது அரிதானது.
ஆனால், ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் மனசெல்லாம் தொடரில் நடிகை சந்தியா, சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இதனால், மனசெல்லாம் தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சிறப்புத் தோற்றத்தில் சந்தியா நடிக்கவுள்ளதால், அவரின் வருகையால் தொடரில் திருப்பங்கள் ஏற்படலாம் என்றும், இதனால் டிஆர்பி அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 2.30 மணிக்கு மனசெல்லாம் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் பரம்வேஸ்வரி ரெட்டி, வெண்பா, தீபக் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

காதலித்தவர்களை திருமணம் செய்துகொள்ள முடியாமல், சூழல் காரணமாக இருவர் தனது ஜோடிகளை மாற்றி திருமணம் செய்துகொள்ளும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர். அந்தத் திருமணத்துக்குப் பிறகு அவர்களின் சூழல், வெறுப்புணர்வில் இருந்து மெல்ல மெல்ல காதலை நோக்கி எவ்வாறு நகர்கிறது என்பதை திரைக்கதையாகக் கொண்டு தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்தத் தொடரில் சிறப்புத் தோற்றத்தில் காதல் சந்தியா நடிக்கவுள்ளார். இதனால், இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | எதிர்நீச்சல் -2 தொடரில் நடிக்கும் கோலங்கள் வில்லன்? நடிகர் அஜய்யின் வைரல் விடியோ!