தாம்பரதத்தில் புதிய மாவட்ட தலைமை மருத்துவமனை: ஆக.5 -இல் முதல்வா் திறந்து வைக்கிற...
விராட் கோலியை முந்திய கே.எல்.ராகுல்..! வலுவான நிலையில் இந்திய அணி!
இங்கிலாந்துக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட்டில் இந்திய அணி விக்கெட் இழக்காமல் வலுவான நிலையில் இருக்கிறது.
ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி தொடரில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகிக்கிறது.
மான்செஸ்டரில் இன்று தொடங்கிய 4-ஆவது டெஸ்ட்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
மதிய உணவு இடைவேளை வரை இந்திய அணி 26 ஓவர்கள் பேட்டிங் செய்து விக்கெட் இழக்காமல் 78 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தப் போட்டியில் கே.எல்.ராகுல் 82 பந்துகளில் 40 ரன்கள் எடுக்க, ஜெய்ஸ்வால் 36 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார்கள்.
இங்கிலாந்தில் அதிக ரன்கள் எடுத்த இந்தியர்கள்
1575 - சச்சின் டெண்டுல்கர்
1376 - ராகுல் திராவிட்
1152 - சுனில் கவாஸ்கர்
1000* - கே.எல்.ராகுல்
976 - விராட் கோலி
வெளிநாட்டில் 1000-க்கும் அதிகமான ரன்கள் எடுத்த இந்திய தொடக்க வீரர்கள்
1404 - சுனில் கவாஸ்கர் (மேற்கிந்தியத் தீவுகளில்)
1152 - சுனில கவாஸ்கர் (இங்கிலாந்தில்)
1001 - சுனில் கவாஸ்கர் (பாகிஸ்தானில்)
1000* - கே.எல்.ராகுல் (இங்கிலாந்தில்)