செய்திகள் :

ராசேந்திர சோழனின் பிறந்தநாளில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி: முதல்வர்

post image

ராசேந்திர சோழனின் பிறந்தநாளில், அவர் உருவாக்கிய சோழகங்கம் ஏரியில் நீர்வள ஆதார மேம்பாட்டுப் பணிகளும் - சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன் என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராசேந்திர சோழன் பிறந்தநாளான ஆடி திருவாதிரை விழாவினை 2021- ஆம் ஆண்டு முதல் அரசு விழாவாகக் கொண்டாப்பட்டு வருகிறது. கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராசேந்திர சோழனின் நினைவைப் போற்றும் வகையிலும், அந்தப் பேரரசனின் அழியாப் புகழினை உலகிற்குச் சொல்லும் வகையிலும், ஒரு புதிய அருங்காட்சியகம் 10 ஏக்கர் பரப்பளவில் ரூ.22.10 கோடி செலவில் அமைத்திட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான திட்டம் மற்றும் ஆரம்ப கட்டப்பணிகள் துவக்கப்பட்டுள்ளன.

மாமன்னன் ராஜேந்திர சோழன் கடாரம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளை வெற்றிகண்டு ஆயிரம் ஆண்டு நிறைவடைந்த நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் இந்த வருடம் 23.7.2025 ஆடி திருவாதிரை விழாவினை முன்னிட்டு புதிய அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

அரியலூர் மாவட்டம், பொன்னேரி எனப்படும் சோழகங்கம் ஏரி ராசேந்திர சோழ மன்னரால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க ஏரியாகும். ராசேந்திர சோழ மன்னர் ஆட்சிகாலத்தில் சோழகங்கம் என்றும் அழைக்கப்பட்டது. கங்கை படையெடுப்பு வெற்றியின் நினைவாக கங்கைகொண்ட சோழபுரத்தில் தன் நாட்டு மக்களின் தேவைக்காக கங்கை நீரைக் கொண்டு சோழகங்கம் என்ற ஏரியை (பொன்னேரி) ராசேந்திர சோழன் உருவாக்கினார் என்பது திருவாலங்காட்டு செப்பேடுகளின் வாயிலாக அறிகிறோம்.

மாமன்னன் இராஜேந்திர சோழன் உருவாக்கிய இந்த ஏரியில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளைத் தற்போது ரூ.12 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, 700 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியின் கரைகள் பலப்படுத்தப்படும். மேலும், 15 கிலோமீட்டர் நீளமுள்ள உபரிநீர் வழிக் கால்வாய்களை புனரமைத்தல், 4 வடிகால் பகுதிகளை தூர்வாருதல், 4 மதகுகளை புனரமைத்தல், 38 கிலோமீட்டர் நீளமுள்ள வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணி உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படும். இதன்மூலம் பிச்சனூர், குருவாலப்பர் கோவில், இளையபெருமாள் நல்லூர், கங்கைகொண்ட சோழபுரம், உட்கோட்டை மற்றும் ஆயுதகளம் ஆகிய கிராமங்களில் 1374 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.

மேலும், சோழகங்கம் ஏரியை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையின் மூலம் ரூ.7.25 கோடி மதிப்பீட்டில் தகவல் தொடர்பு மையம், நடைபாதை சிறுவர் விளையாட்டு மையம், இருக்கையுடன் கூடிய பூங்கா, சுற்றுச்சுவர், வழிகாட்டிப் பலகை, கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாப்பு அறை, மின்வசதிகள், கழிப்பிட வசதி, பசுமைப் பரப்பை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்படும் என்று் முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், மாமன்னர் ராசேந்திர சோழனின் பிறந்தநாளில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடா்பாக அவா் சமூக வலைதளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:

மாமன்னர் ராசேந்திர சோழனின் பிறந்தநாளில், அவர் உருவாக்கிய சோழகங்கம் ஏரியில் நீர்வள ஆதார மேம்பாட்டுப் பணிகளும், சுற்றுலா

மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்படுவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு:

கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் எனப் பெரும்புகழ் எய்திய தமிழ் மாமன்னர் இராசேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரையை அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடிட 2021-ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்தது நமது திராவிடமாடல் அரசு!

அவரது தலைநகரான கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழப் பேரரசின் வரலாற்றுச் சிறப்புகளையும் கடல் கடந்த வணிகத் தொடர்புகளையும் பறைசாற்றும் விதமாக அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவித்து, அதற்கும் கடந்த ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டினேன். காண்போரைக் கவர்ந்திடும் வண்ணம் அது எழுந்து வருகிறது.

இவற்றின் தொடர்ச்சியாக, ராசேந்திர சோழனின் பிறந்தநாளில், அவர் உருவாக்கிய சோழகங்கம் ஏரியில் நீர்வள ஆதார மேம்பாட்டுப் பணிகளும் - சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்! என கூறியுள்ளார்.

புதிய உச்சத்தில் தங்கம் விலை: பவுன் ரூ.75 ஆயிரத்தை கடந்து விற்பனை!

Happy to announce tourism development work on Rajendra Chola's birthday CM...

மான்செஸ்டர் டெஸ்ட்: இந்தியா பேட்டிங்! சிஎஸ்கே வீரர் அன்ஷுல் காம்போஜுக்கு வாய்ப்பு!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ‘ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராப... மேலும் பார்க்க

பிரதமரும் அமைச்சரவைச் சகாக்களும் இன்னும் மெளனம் காப்பது ஏன்?

குடியரசு துணைத் தலைவர் ராஜிநாமா குறித்து பிரதமரும் அமைச்சரவைச் சகாக்களும் இன்னும் மெளனம் காப்பது ஏன்? என மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவின் 14-ஆவது கு... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு: தொழிலாளிகள் 2 பேர் பலி

ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தொழிலாளிகள் இரண்டு பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.செவ்வாய் இரவு மற்றும் புதன்கிழமை அதிகாலை மஹோர் தாலுக... மேலும் பார்க்க

பெருமுதலாளிகள் மோசடி என்றால் வங்கிகள் கைகளை இறுகக் கட்டிக் கொள்வது ஏன்?: சு.வெங்கடேசன் எம்.பி.

அனில் அம்பானி தொடர்புடைய வங்கி கணக்குகளை “மோசடி” என ஸ்டேட் வங்கி வகைப்படுத்தியுள்ளது. ஆனால்… பல்லாயிரம் கோடி மோசடி பணத்தை 9 ஆண்டுகளாக மீட்கவில்லை. சாமானிய மக்களின் கடன் என்றால் கழுத்தில் துண்டை போட்டு... மேலும் பார்க்க

புதிய உச்சத்தில் தங்கம் விலை: பவுன் ரூ.75 ஆயிரத்தை கடந்து விற்பனை!

வரலாற்றில் முதல் முறையாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.760 உயா்ந்து ரூ. 75,040-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை உயர்வு நகைப்பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. சென்னையில்... மேலும் பார்க்க

சென்னையில் குழந்தை கழுத்தறுத்து கொலை: உறவினர்கள் போராட்டம்

சென்னை ஓட்டேரியில் குடும்பத் தகராறில் குழந்தையை கழுத்தறுத்து கொன்று தற்கொலைக்கு முயன்ற தந்தையை கைது செய்யக்கோரி தாயின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குழந்தையின் தாயை தந்தை செல்போனில் மிரட்ட... மேலும் பார்க்க