செய்திகள் :

ரைட்ஸ் நிறுவனத்தில் உதவி மேலாளர் பணி: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

post image

மத்திய பொதுத்துறை நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்த விவரங்களை பார்ப்போம்...

பதவி: DGM (Civil-BLT Expert) - 1

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 11 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பதவி: DGM (Transport Economist) - 1

தகுதி: பொறியியல் துறையில் சிவில், 5 ஆண்டுகள் கட்டிடக்கலை(பி.ஆர்க்), திட்டமிடல் ஆகிய பிரிவில் இளநிலைப் பட்டம் அல்லது பொருளாதாரம், புள்ளியியல், மேலாண்மை (நிதி), போக்குவரத்து பொறியியல், போக்குவரத்து திட்டமிடல், போக்குவரத்து பொருளாதாரம், போக்குவரத்து பொறியியல் அல்லது அதற்கு இணையான பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பதவி: DGM (Civil-Marine Structural Expert) - 2

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளங்கலை மற்றும் கடல் கட்டமைப்புகள் அல்லது கடலோரப் பொறியியல் அல்லது கடல் பொறியியல் அல்லது சமமான பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.70,000 - 2,00,000

வயதுவரம்பு: 41-க்குள் இருக்க வேண்டும்.

பதவி: Assistant Manager

1. Civil - Planning - 2

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. SHE Expert - 4

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் Industrial Safety, Environmental Engineering-இல் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

3. Civil-Hydrographic Surveyor - 1

தகுதி: பொறியியல் துறையில் சிவில், மரைன் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

4. Civil-Rail Alignment Design - 2

தகுதி : பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் Geotechnical Engineering, Civil Structural Engineering பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

5. Civil-GIS Specialist - 1

தகுதி : பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் Remote Sensing, Geoinformatics பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இந்தியன் ரயில்வேயில் 6,235 டெக்னீசியன் பணியிடங்கள்: ஆர்ஆர்பி அறிவிப்பு

6. Civil- BIM Modeller - 4

தகுதி : பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மேற்கண்ட பணிகளுக்கு மாதம் ரூ. 40,000 - 1,40,000

வயதுவரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம்: தில்லி,குர்கான், கொல்கத்தா, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத், கௌகாத்தி

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ. 600. இடபுள்யுஎஸ், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ. 300. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.rites.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 27.7.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

RITES Ltd., a NavRatna Central Public Sector Enterprise under the Ministry of Railways, Govt. of India is a premier multi-disciplinary consultancy organization in the fields of transport, infrastructure and related technologies.

விண்ணப்பித்துவிட்டீர்களா?: கடலோரக் காவல் படையில் உதவி தளபதி பணி

இந்திய கடலோரக் காவல் படையில் Assistant Commandant பணிகளுக்கு தகுதியான இந்திய ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது பற்றிய விபரம் வருமாறு:பணி: Assistant Commandant (General Duty-Male)... மேலும் பார்க்க

காலணி வடிவமைப்பு- மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை: 8-ம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு!

காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாகவுள்ள Junior Faculty, Faculty பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட... மேலும் பார்க்க

பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பொதுத் துறை வங்கியான பரோடா வங்கியில் வங்கியில் காலியாகவுள்ள 2,500 உள்ளூர் வங்கி அலுவலர்(Local Bank Officer)பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது பற்றிய வ... மேலும் பார்க்க

தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணி!

சேலம், தேனி, உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களிள் உள்ள தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழக கல்லூரிகளில் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வில் ... மேலும் பார்க்க

ஜூலை 25-இல் திருப்பத்தூரில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக ஆட்சியா் க.... மேலும் பார்க்க

ஜூலை 26-இல் காஞ்சிபுரத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம்: தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சாா்பில் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவா் கல்லூரியில் ஜூலை 26-ஆம் தேதி காலை 9 மணிக்கு தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியா... மேலும் பார்க்க